எப்பா இது உலகமகா நடிப்புடா சாமி! நடக்காதுனு தெரிஞ்சு சொல்றது எவ்ளோ புத்திசாலித்தனம் - விஜயை விளாசும் தயாரிப்பாளர்

vijay
Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சமீபகாலமாக விஜய் ஒரு பேசு பொருளாகவே இருந்து வருகிறார். அந்தளவுக்கு திரும்பியப் பக்கமெல்லாம் தன் மக்கள் இயக்கத்தை வைத்து ஏதாவது ஒரு வகையில் பிரபலமாகி விடுகிறார்.
தற்போது தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வரும் விஜய் இந்தப் படத்திற்கு பிறகு அரசியலிலும் கால்பதிக்க இருக்கிறார். ஏற்கனவே அதற்கான உத்திகளை கையாண்ட நிலையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்த தளபதி 68 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மன்சூர் அலிகானுக்கு பொடணியில் போட்டு அனுப்பிய நீதிமன்றம் .. அபராதம் இவ்வளவு பெரிய தொகையாம்…!
இந்த வெற்றிடத்தை இனி அஜித்தான் தனிக்காட்டு ராஜாவாக நிரப்புவார் என்று ஒரு சினிமா பத்திரிக்கையாளர் கூறியிருந்தார். மேலும் ரசிகர்களால் இந்தளவு உயரத்தை அடைந்த விஜய் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியல் என்பது சரியான வழி என்று விஜயின் அரசியல் பயணம் குறித்து ஒரு தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
உயிரை விடும் அளவுக்கு விஜய் மீது ரசிகர்கள் வெறி கொண்டிருக்கின்றனர். இணையத்திலும் விஜய்க்காக மற்ற ரசிகர்களிடம் சண்டை போட்டுக் கொண்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான கே.ராஜன் விஜய் குறித்து ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: மூக்குத்தி போட வேற இடம் கிடைக்கலயா டியர்!.. காஜி ரசிகர்களை சூடேத்தும் தனுஷ் பட நடிகை..
ஒரு விழா மேடையில் விஜய் ‘என் தோலை உங்கள் காலுக்கு செருப்பாக தைத்து போட காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்பது மாதிரி சொல்லியிருந்தாராம். இதை குறிப்பிட்டு பேசிய கே.ராஜன் விஜய் அப்படி சொன்னது சுத்தப் பொய். அது நடக்காத காரியம் கூட. அதனால் மேடைக்காக மிகை வார்த்தைகளை பேசக் கூடாது.
இது மிகையான வார்த்தை என்று ரசிகர்களுக்கே தெரியும். அதையெல்லாம் விட்டு விட்டு 6 மாதத்திற்கு ஒரு முறை ரசிகர்களை வந்து சந்தித்தால் போதும் என்று கே.ராஜன் கூறினார்.
இதையும் படிங்க: வைரலாக நினைத்து மோசமா இறங்கிய பிக்பாஸ் தனலட்சுமி.. ஏம்மா நீ இன்னும் திருந்தவே இல்லையா..