கதையா?.. பிரம்மாண்டமா?.. குழம்பியதால் சினிமாவிலிருந்தே காணாமல் போன தயாரிப்பாளர்!.. அட இவரா?!..

by ராம் சுதன் |   ( Updated:2024-03-16 07:29:22  )
கதையா?.. பிரம்மாண்டமா?.. குழம்பியதால் சினிமாவிலிருந்தே காணாமல் போன தயாரிப்பாளர்!.. அட இவரா?!..
X

Gentleman

தயாரிப்பாளர் குஞ்சுமோன் படங்கள் என்றாலே 90களில் இளசுகளுக்கு கொண்டாட்டம் தான். இவரது படங்கள் பெரும்பாலும் மெகாஹிட் தான். ஆனால் அப்படிப்பட்ட தயாரிப்பாளரே காணாமல் போக என்ன காரணம் என்று பார்ப்போமா...

KT.Kunjumon

KT.Kunjumon

வசந்தகால பறவை படத்தை இயக்குனர் பவித்ரன் இயக்கினார். தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இதுதான் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு முதல் படம். பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் தன் முயற்சியை இவர் கைவிடவில்லை. அடுத்ததாக அவரையே இயக்குனராகப் போட்டு சூரியன் படத்தை இயக்கினார். அது பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அடுத்து ஜென்டில்மேன். இந்தப் படத்தை ஷங்கர் இயக்க, அசோசியேட் டைரக்டராக பவித்ரன் இருந்தார்.

கமல் நடிப்பில் வெளியான குரு படத்தின் கதை தான் ஜென்டில் மேன் கதையும். இது ஒரு ராபின்ஹூட் கதை. இருக்குறவன்கிட்ட கொள்ளை அடிச்சி இல்லாதவன்கிட்ட கொடுக்குற கதை தான். அடுத்து காதலன், காதல் தேசம் என இவரது தயாரிப்பில் எல்லா படங்களுமே மெகா ஹிட் தான். அடுத்து பிரம்மாண்டத்திற்குள் போனார்.

Ratchagan

Ratchagan

ரட்சகன் படத்தில் நாலைந்து காரை எரிப்பது, பெரிய பெரிய செட் போட்டு தகர்ப்பது போன்ற விஷயங்களைப் படங்களில் செய்தார். இதனால் படங்கள் தோல்வி அடையும் போது அவர் தயாரிக்கும் படங்களும் குறைய ஆரம்பித்தது.

பிரம்மாண்டத்தை நம்பி தன் வாழ்க்கையையே தொலைத்து விட்டார். தன் மகனை வைத்து கோடீஸ்வரன் என்ற படத்தை எடுத்தார். அது கடைசி வரை ரிலீஸே ஆகவில்லை. ஆரம்பத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து சின்ன பட்ஜெட் படங்களைப் பண்ணும்போது நல்ல தயாரிப்பாளராக இருந்தார். அதன்பிறகு பிரம்மாண்டத்தை நம்பியதால் அவரது படங்கள் தோல்வியைத் தழுவின. அதில் அனாவசியமான செலவுகளில் மாட்டியதால் அவரது படங்கள் தொடர்ந்து போகாமல் லாங் கேப் விழுந்தது.

மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் சுபைர் ஜமால் தெரிவித்துள்ளார்.

Next Story