“அது மட்டும் நடக்கலைன்னா என் ஆசை நிறைவேறியிருக்கும்”… ரஜினியின் மாஸ் ஹிட் படத்தால் வேதனையில் ஆழ்ந்த தயாரிப்பாளர்…
தமிழின் முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்த காஜா மைதீன், “கோபாலா கோபாலா”, “ஆனந்த பூங்காற்றே”, “பாட்டாளி”, “பெண்ணின் மனதை தொட்டு”, “வாஞ்சிநாதன்” போன்ற பல வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் “ஜனா”, “பேரரசு”, “தேவதையை கண்டேன்” போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் காஜா மைதீன், ரஜினியை வைத்து தான் தயாரிக்க இருந்த திரைப்படத்தை குறித்தும், அத்திரைப்படம் அவர் கைவிட்டுப் போனது குறித்தும் அப்பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
ஒரு நாள் ரஜினிகாந்திற்கு தொடர்பு கொண்ட காஜா மைதீன், “உங்களை நான் சந்திக்கவேண்டும்” என கோரிக்கை வைத்தாராம். அடுத்த நாளே சந்திக்கலாம் என ரஜினிகாந்த் கூறினாராம். அதன்படி அடுத்த நாள் காலை ரஜினிகாந்த்தின் மண்டபத்திற்குச் சென்று அவரை சந்தித்தாராம். அப்போது கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் இருவரும் பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார்களாம்.
அதன் பின் “நான் உங்களுக்கு என்ன பண்ண வேண்டும்” என கேட்டாராம் ரஜினிகாந்த். அதற்கு காஜா மைதீன் “எனக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் சார். என் கம்பெனிக்கு ஒரு படம் நடித்துக்கொடுங்கள். அதில் வரும் லாபம் கூட எனக்கு வேண்டாம். ஆனால் நீங்கள் என் கம்பெனிக்கு ஒரு படம் நடிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தாராம்.
அதன் பின் சில நாட்கள் கழித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், காஜா மைதீனை சந்தித்தபோது “ரஜினி சார் உங்கள் பேன்னருக்கு ஒரு படம் பண்ணுகிறார். என்னைத்தான் டைரக்ட் செய்யச் சொல்லியிருக்கிறார்” என கூறினாராம். இதை கேட்டவுடன் காஜா மைதீன் சந்தோஷத்தில் மூழ்கினாராம்.
ஆனால் இதனிடையே தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடல் நிலை சரியில்லாமல் போனதாம். அப்போது அவரை நலம் விசாரிக்கச் சென்றார் ரஜினிகாந்த். அங்கே ரஜினிகாந்தை வைத்து ஏவிஎம் நிறுவனம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க பேச்சு வார்த்தைகள் நடந்ததாம். அப்படி உருவான திரைப்படம்தான் “சிவாஜி”.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத செயலை செய்ததால் பட வாய்ப்புகளை இழந்த கதாசிரியர்… அடப்பாவமே!!
காஜா மைதீனுக்காக வைத்திருந்த கால்ஷீட் நாட்களை ரஜினிகாந்த் அப்படியே “சிவாஜி” திரைப்படத்திற்கு கொடுத்துவிட்டாராம். அதன் பின் பல காரணங்களால் காஜா மைதீனின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க முடியவில்லையாம்.