Cinema News
பல கோடி நஷ்டம் வருமா?!. விக்கியிடம் வசமா சிக்கிய லலித்குமார்!.. கமல் எஸ்கேப் ஆனது சும்மா இல்ல!..
LIC: திரைத்துறையில் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் பண வசதியுள்ள ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் வசமாக வச்சி செய்து விடுவார்கள். ஒரு இயக்குனர் என்பவர் அந்த படத்தின் பட்ஜெட் என்ன?.. அதன் வியாபாரம் என்ன?.. தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையெல்லாம் கணக்குப்போட்டுதான் வேலையை திட்டமிட்ட வேண்டும்.
குறிப்பாக அந்த படத்தில் நடிக்கும் ஹீரோவின் மார்க்கெட், அந்த ஹீரோவுக்காக வியாபாரம் இரண்டையும் கணக்கிட்டுதான் பட்ஜெட்டையே அவர் திட்டமிட்டு தயாரிப்பாளரிடம் கொடுக்க வேண்டும். ஆனால், சில இயக்குனர்கள் இதுபற்றி எதையுமே யோசிக்கமாட்டார்கள். தங்களுக்கு என்ன தோன்றுகிறதை அதை செய்வார்கள். படப்பிடிப்பு நாட்களை இழுத்துக்கொண்டே போவார்கள்.
இதையும் படிங்க: இதனாலதான் நான் உங்க படத்துல நடிக்கல!. கேள்வி கேட்ட ரஜினியிடம் கேப்டன் சொன்ன நச் பதில்..
அப்படி முடிந்து வெளியாகும் ஒரு திரைப்படம் கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்காது. மாறாக நஷ்டத்தையே கொடுக்கும். லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் கோப்ரா படம் எடுக்கும்போது இப்படித்தான் சிக்கி பல கோடி நஷ்டத்தை சந்தித்தார். இப்போது மீண்டும் அவர் விக்னேஷ் சிவனிடம் அதேபோல் சிக்கி இருக்கிறார்.
விக்கியின் இயக்கத்தில் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் நடிக்கும் எல்.ஐ.சி என்கிற படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கும் லலித்குமார்தான் தயாரிப்பாளர். இப்படதில் நடிக்க பிரதீப்புக்கு 8 கோடி, விக்னேஷ் சிவனுக்கு ரூ.5 கோடி, எஸ்.ஜே.சூர்யாவுக்கு 10 கோடி, அனிருத்துக்கு 8 கோடி என சம்பளமே இதுவே 30 கோடியை தாண்டுகிறதாம்.
இதையும் படிங்க: எலியும் பூனையுமா இருந்து திருமணத்தில் கைகோர்த்த ராம்கி – நிரோஷா! இப்படி ஒரு காதல் கதையா?
அதன்பின் படமெடுக்க செலவு என கணக்கு போட்டால் இப்படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. படம் ஓடி நல்ல வசூலை பெற்றுவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால், தோல்வி அடைந்துவிட்டால் 30 கோடிக்கும் மேல் நஷ்டம் என திரையுலகிலேயே சிலர் பேச துவங்கிவிட்டனர். ஆனாலும், எஸ்.ஜே.சூர்யா இருப்பதால் படம் தப்பித்துவிடும் எனவும் சிலர் சொல்கிறார்கள்.
இந்த படத்தை முதலில் தயாரிக்கவிருந்தது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்தான். ஆனால், விக்னேஷ் சிவன் சொன்ன பட்ஜெட், வியாபாரம் எல்லாவற்றையும் கணக்குபோட்ட கமல் அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். அதன்பின்னரே லியோ பட தயாரிப்பாளர் லலித்குமாரிடம் பேசி சம்மதம் வாங்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
லலித்குமார் இப்படம் இன்னொரு கோப்ரா-வாக மாறாமல் இருந்தால் சரி!..
இதையும் படிங்க: அஜித் சம்பளம் இத்தனை கோடியா? உருட்டுனாலும் நியாயம் வேணாமாப்பா! கலாய்த்த புளூசட்டை மாறன்