நடிக்கவே தெரியாது.. ஆனா சம்பளமோ ரூ.100 கோடி... அஜித்தை கலாய்த்த தயாரிப்பாளர்...
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள பெரிய ஹீரோக்களில் அஜித் முக்கியமானவர். இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு நிகராக இவரின் திரைப்படங்களின் வியாபாரம் அதிகரித்துள்ளது. இவர் நடித்த விஸ்வாசம் திரைப்படம் ரஜினியின் பேட்ட படத்தை விட அதிக வசூலை நிகழ்த்தியது.
எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலை என இருப்பவர் அஜித். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜாலியாக பைக்கை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற துவங்கிவிட்டார். இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் முடிந்து தற்போது வேறு நாடுகளில் பயணம் செய்து வருகிறார். ஒருபக்கம் அவரின் துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அஜித்தை வைத்து ‘என்னை தாலாட்ட வருவாளா’ என்கிற படத்தை தயாரித்த வெடிமுத்து என்பவர் சமீபத்தில் ஒரு விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என்னை தாலாட்ட வருவாளா படத்தின் ஒரு காட்சிக்காக அஜித்தை நான்கு விதமாக நடித்துக்காட்ட சொன்னேன். ஆனால், அஜித் நடித்துக்காட்டவில்லை. அதன்பின் நான் நடித்துக்காட்டினேன். நடிக்கத்தெரியாத அந்த அஜித்துக்கு தற்போது சம்பளம் ரூ.100 கோடி’ என அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்னை தாலாட்ட வருவாளா திரைப்படம் 2003ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.