பல்க்கா சம்பளம் கொடுத்தும் வாலாட்டிய கார்த்திக்!.. தயாரிப்பாளர் சொன்ன வார்த்தையில் ஓடிய நவரச நாயகன்..

by Rohini |   ( Updated:2024-04-28 08:02:45  )
karthick
X

karthick

Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் பாரதிராஜாவால் கண்டெடுத்த முத்து என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பல நல்ல படங்களை இதுவரை இந்த தமிழ் சினிமாவிற்காக கார்த்திக் கொடுத்திருக்கிறார்.

முதல் படத்திலேயே ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கார்த்திக் அடுத்தடுத்த படங்களில் தான் யார் என்பதை நிரூபித்தார். ஆனால் ஆரம்பத்தில் அவருடைய படங்கள் சொல்லும்படியாக போகவில்லை. இருந்தாலும் அடுத்தடுத்து அவரைத் தேடி பல படங்களின் வாய்ப்பு வந்தது. பல தோல்விகளுக்கு பிறகு கார்த்திக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் மௌனராகம்.

இதையும் படிங்க: கண்ணதாசனுக்கு தட்டிய பொறி!… அத்தனை ராமன்களும் வரிசையாக வந்துட்டாங்க… என்ன பாடல்னு தெரியுமா?..

அதில் ஒரு சில நிமிடங்களே நடித்திருந்தாலும் இன்று வரை கார்த்திக்கின் கதாபாத்திரம் தான் மக்கள் மனதில் நின்னு பேசுபவையாக இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து அக்னி நட்சத்திரம் போன்ற படத்தை சொல்லலாம். அந்த காலத்தில் கார்த்திகை பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வந்தன. ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வருவதில்லை. பெண்களுடன் சுற்றுவது என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதனாலயே அவரை படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தயங்கி இருந்தார்கள்.

இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் கார்த்திக்கை பற்றி ஒரு தகவலை கூறினார். கார்த்திக் நடிப்பில் வாசு இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான படம் சீனு. இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்த நிலையில் டப்பிங் ஆரம்பிக்கப்பட்டதாம். படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் டப்பிங் முடித்தவுடன் கார்த்திக் மட்டும் வரமாட்டேன் என்று வீட்டிலேயே இருந்தாராம்.

இதையும் படிங்க: 14 வருட காதல்… கடத்தல் செய்கிறாரா கணவர்… முதல்முறையாக உண்மையை உடைத்த வரலட்சுமி!…

இயக்குனர் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே கார்த்திக்கிடம் போய் பேசியும் எந்த பயனும் இல்லையாம். அதனால் தயாரிப்பாளரிடமே 'நீங்களே போய் பேசுங்கள்' என கூறி இருக்கிறார்கள். உடனே மாணிக்க நாராயணன் கார்த்திகை தொலைபேசியில் அழைத்து ‘கார்த்திக் சிங்கிள் பேமென்ட் 45 லட்சம் சம்பளத்தை கொடுத்து விட்டேன். ‘உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி இருந்தும் ஏன் டப்பிங் வரமாட்டேங்கிறீர்கள்?.. படம் எடுத்து நான் சம்பாதித்ததை விட நல்ல பேரை சம்பாதித்து இருக்கிறேன். அந்த பேரை கெடுக்கணும்னு நீங்கள் நினைக்கிறீர்களா’ என கேட்டாராம்.

manickam

manickam

உடனே கார்த்திக் ‘ஐயோ இல்ல சார் நான் உடனே வருகிறேன்’ எனக் கூறிவிட்டு அன்று இரவே டப்பிங் வந்து இரவோடு இரவாகவே டப்பிங் முடித்துவிட்டு சென்றாராம். இதைப்பற்றி கூறிய மாணிக்கம் நாராயணன் 'இவ்வளவு சின்சியரா இருக்கிறவரு ஏன் இத்தனை பேர சாகடிச்சாருன்னு தெரியல' என கூறினார்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் தல தளபதி படம் ரிலீஸ்! அஜித் வெறியனா கவின் செஞ்ச வேலையை பாருங்க

Next Story