அஜித் மாதிரி இருந்தா நாசமாதான் போவ!.. லோகேஷ் கனகராஜை போட்டு பொளக்கும் தயாரிப்பாளர்!..
Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வருகிறார். மாநகரம் ,கைதி, மாஸ்டர் ,லியோ ,விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் இந்த தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனராக பார்க்கப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இப்போது ரஜினியை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
வேட்டையன் படத்தை முடித்ததும் தனது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக ரஜினி இமயமலை சென்று இருக்கிறார். அங்கிருந்து அவர் திரும்பி வந்ததும் லோகேஷ் உடன் கூலி படத்தில் இணைய இருக்கிறார் ரஜினி. ரஜினியின் தரப்பில் லோகேஷ் உடன் இணைவதை மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ரஜினிக்கும் லோகேஷ் மீது ஒரு பெரிய நம்பிக்கை இருக்கிறது.
ஆரம்ப காலங்களில் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்தாலும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு வெறியில் இருக்கிறார் ரஜி.னி கமலுக்கு எப்படி விக்ரம் என மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தாரோ அதேபோல தனக்கும் ஒரு ஹிட் படம் அமைய வேண்டும் என்று அப்போதிலிருந்தே ரஜினி ஏங்கிக் கொண்டிருந்தார். அதனால் லோகேஷ் உடன் இணைவதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி .
இதையும் படிங்க: லேடி சூப்பர்ஸ்டார் நிலைமை இம்புட்டு மோசமா போச்சே… கவின் படத்தில் என்ன கேரக்டர் தெரியுமா?
இதில் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னொரு பக்கம் அந்தப் படத்தில் தன் அனுமதியின்றி தன் இசையை பயன்படுத்தியதற்காக இளையராஜா போட்ட கேஸ் பற்றிய செய்தியும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. லோகேஷை பொருத்தவரைக்கும் அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றன. போதைப்பொருள், மது இவைகள் தான் படத்தில் முக்கிய அம்சங்களாக இருந்திருக்கின்றன.
இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் இப்ப உள்ள இயக்குனர்களில் உங்களைக் கவர்ந்த இயக்குனர் யார் என்ற கேள்வி கேட்டபோது அவர் எனக்கு இப்போ உள்ள இயக்குனர்களில் லோகேஷை சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஏனெனில் வன்முறை மட்டுமே அவருடைய படங்களில் நிறைந்து இருக்கின்றன. இந்த சமுதாயத்தில் நாம் ஒரு பெரிய மீடியாவில் இருந்து வருகிறோம்.
இதையும் படிங்க: உங்களை பாத்தாலே பயமா இருக்கு!.. கேப்டன் விஜயகாந்தே பயந்த நடிகை யார் தெரியுமா?….
இதை பின்பற்றும் ரசிகர்கள் நல்வழியில் செல்ல வேண்டுமே தவிர இந்த படங்களை பார்த்து தீயவழியில் போகக்கூடாது. அதற்கு ஒரு உந்துதலாக இருக்கிறார் லோகேஷ். இதனால் ஒரு ரசிகர் அவர் மீது கேஸும் போட்டார். இருந்தாலும் தொடர்ந்து அந்த மாதிரி படங்களையே கொடுத்து வருகிறார். இந்த சமூகத்திற்கு நம்மால் எதுவும் நல்லது பண்ண முடியுமா என்பதைத்தான் யோசிக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு நாம் ஜெயிக்க வேண்டும், காசு சம்பாதிக்க வேண்டும் என அஜித்குமார் மாதிரியே இருக்க வேண்டும் என நினைக்க கூடாது எனக் கூறியிருக்கிறார் மாணிக்கம் நாராயணன். ஏற்கனவே அஜித்துக்கும் மாணிக்கம் நாராயணனுக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இதுவரை அஜித்தை பற்றி தரக்குறைவாக யாரும் பேசியதில்லை .ஆனால் மாணிக்கம் நாராயணன் மிகவும் கடுமையாக அஜித்தை பற்றி பேசி இருக்கிறார். அஜித் நல்லா இருக்க மாட்டான், அவன் ஜென்டில்மேனே கிடையாது, என்றைக்காவது ஒருநாள் என்னிடம் வருவான், இப்படியே போனால் அவன் மனிதனே கிடையாது என்றெல்லாம் பேசி இருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல சத்யராஜை பார்த்து கொஞ்சம் நடிக்கக் கத்துக்கோங்க… வெளுத்து வாங்கிய பிரபலம்