படம் குப்பை.. சூர்யாவை ஏன் திட்டுறீங்க? கொந்தளித்த அஜித்தின் நலம் விரும்பி

by Rohini |   ( Updated:2024-11-23 15:23:11  )
kanguva
X

kanguva

கங்குவா படத்தின் அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை. படத்தைப்பற்றி இன்னும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படமாக கங்குவா திரைப்படம் அமைந்தது. தமிழ் சினிமாவை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லும் படமாக கங்குவா திரைப்படம் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் தமிழ் சினிமாவிலேயே அதிக ட்ரோலுக்கு ஆளாகிய படமாக கங்குவா திரைப்படம் மாறியதுதான் யாரும் எதிர்பார்க்காதது. மிகப்பெரிய பொருள் செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படம் 2000 கோடி வசூலை அள்ளும் என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் போட்ட பட்ஜெட்டையே எடுக்க முடியுமா என்ற சூழ்நிலையில்தான் இந்த படம் இப்போது இருக்கிறது.

இதையும் படிங்க: யாரு சொன்னா? அடுத்த தல, தளபதி நாங்கதான்.. கட்டியணைத்து போஸ் கொடுக்கும் சிம்பு – தனுஷ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்திருந்தது. அதனால் அவர் மீதும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்படி ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் என்றும் ஆச்சரியத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தனை எதிர்பார்ப்புகளையும் சுக்குநூறாக்கியது இந்த திரைப்படம். இதற்கெல்லாம் ஒரே காரணம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ஒட்டுமொத்த படகுழுவும் போட்ட பில்டப் தான் என்று கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் கங்குவா படத்தைப் பற்றியும் அதில் நடித்த சூர்யாவை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்

manickam

manickam

. அதாவது மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? சூர்யா ஒரு நல்ல நடிகர். படம் குப்பையாக இருந்தால் அவர் பொறுப்பாக முடியாது. அதற்கு காரணம் ஒன்று தயாரிப்பாளராக இருக்க வேண்டும் .இல்லை என்றால் இயக்குனர் தான் காரணம். படம் நல்லா வரலைனா அது ஃபிளாப் தான். சினிமாக்காரங்க மக்களை ஏமாற்றிக்கொண்டு தான் இருக்காங்க என சமீபத்திய ஒரு பேட்டியில் மாணிக்கம் நாராயணன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: யாரு சொன்னா? அடுத்த தல, தளபதி நாங்கதான்.. கட்டியணைத்து போஸ் கொடுக்கும் சிம்பு – தனுஷ்

இவர் பெரும்பாலும் உண்மையை வெளிப்படையாக பேசுபவன் என சொல்லி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் திட்டி தீர்த்து வருகிறார். அவர்களால் தான் பட்ட கஷ்டம் என்ன என்பதை ஒவ்வொரு பேட்டியிலும் கூறி வந்தவர். குறிப்பாக அஜித்தை பற்றி பல வகைகளில் பேசியிருக்கிறார். இதுவரை அஜித்தை பாசிட்டிவான எண்ணத்திலேயே பார்த்தவர்கள் மத்தியில் அவரைப் பற்றி மிகவும் நெகட்டிவாக பேசிய ஒரே ஆள் இந்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தான். அதனால்தான் இவரை கிண்டலாக அஜித்தின் நலம்விரும்பி என கூறுவார்கள்.

Next Story