படம் எடுக்குறேன்னு மும்பைல இருந்து பொண்ணுங்களை அழைச்சிட்டு வரான்!. அஜித் பட இயக்குனரை கிழித்த தயாரிப்பாளர்!..
தமிழ் சினிமா நடிகர்களில் ரஜினிக்கு விஜய்க்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் பெரும் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். கடந்த பொங்கலை முன்னிட்டு அவர் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விடாமுயற்சி என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.
இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இடையில் அஜித் பயணம் சென்று வந்ததால் இந்த படத்திற்கான பட வேலைகள் சிறிது தாமதமாகவே நடந்து வருகின்றன. மகிழ் திருமேனி இதற்கு முன்பு இயக்கிய திரைப்படங்களான மீகாமன், தடம், கலகத்தலைவன் போன்ற திரைப்படங்கள் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றன.
ஆனால் அதற்கு முன்பு அவர் இயக்கிய அவரது முதல் படம் பெரும் தோல்வியை கண்டது. அந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரித்தார்.
இயக்குனர் செய்த வேலை:
முன் தினம் பார்த்தேனே என்கிற அந்த படத்தை மகிழ் திருமேனி ஒழுங்காக எடுக்கவில்லை என அவரை குறித்து குற்றம் சாட்டியுள்ளார் தயாரிப்பாளர்.
விக்ரம் மாதிரியான திரைப்படங்களில் இருப்பது போல அந்த படத்தில் செண்டிமெண்ட் இல்லை. அந்த படத்தை அவன் முடித்தப்போது எனக்கே பார்க்க பிடிக்கவில்லை. பிறகு மக்கள் எப்படி பார்ப்பார்கள். படத்திற்கு கதாநாயகி தேர்ந்தெடுக்கிறேன் என்று இரண்டு, மூன்று முறை பாம்பே சென்று வந்தான்.
பிறகு இரண்டு பெண்களை அழைத்து வந்தான். அவர்களும் லட்சணமாகவே இல்லை என புலம்பியுள்ளார் தயாரிப்பாளர்.