ரஜினியை நம்பி ஏமாந்தது தான் மிச்சம்!.. படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரை தலைகுனிய வைத்த தயாரிப்பாளர்!..
சமீபகாலமாக மேடைகளில் தன் இமேஜை கூட பெரிதாக பார்க்காமல் தான் பட்ட அவமானங்கள், தான் பட்ட கஷ்டங்கள் படங்களில் தான் பட்ட வேதனைகள் என அனைத்தையும் ஒரு முன்னுதாரணமாக கூறிவருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்பகாலங்களில் அவர் இருந்த விதம், அவருக்கு பல பேர் செய்த உதவிகள் என அனைத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்.
இதுவே ஒரு நல்ல மனிதர் என்பதை நிரூபித்து வருகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என கருதுகிறார் ரஜினி. ஆனால் இவரால் நான் ஏமாற்றப்பட்டது தான் மிச்சம் என ஒரு சினிமா தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆயிரம் ஜென்மங்கள், ஒரு வீடு ஒரு உலகம், ராஜமரியாதை போன்ற படங்களை தயாரித்தவர் தான் முத்துராமன்.
இவர் ஒரு பேட்டியில் ரஜினியை பற்றி கூறும்போது பல சுவாரஸ்ய தகவல்களை கூறினார். அதாவது ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ரஜினிக்கு வாய்ப்பு கொடுத்தது இவர்தானாம். அதுவும் போக தன்னுடன் உதவியாளராக இருந்த ஜெயராமன் என்பவரை ரஜினி தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கேட்டதற்கு அந்த ஜெயராமனிடம் ‘ நீ என்னுடன் இருந்தால் 200, 300 ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும். அதுவே அங்கு போனால் அதிகம் கிடைக்கும்’ என்று ரஜினி கேட்டார் என்பதற்காக அனுப்பி வைத்தவர்.
இதையும் படிங்க : ரஜினிகாந்த் என்ற பெயர் யாருடையது தெரியுமா?.. கே.பாலசந்தர் ஏன் வைத்தார் தெரியுமா?..
ஒரு காலத்தில் பணகஷ்டம், பட வாய்ப்பும் இல்லாமல் இருந்த முத்துராமன் ரஜினி கொடிபறக்குது படப்பிடிப்பில் இருக்கும் போது போய் சந்தித்திருக்கிறார். அவரிடம் தன்னுடைய நிலைமையை எடுத்துக் கூறி ஏதாவது உதவி கிடைக்குமா? என்று எதிர்பார்த்து போயிருக்கிறார். ஆனால் ரஜினி அவரிடம் ‘ நான் இப்பொழுது கடிகார முள் மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறேன். மேலும் சத்யஜோதி, சுஜாதா, ஏவிஎம் என பல கம்பெனிகளுக்கு படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று முடியாது என்பதை நாசுக்காக சொல்லியிருக்கிறார்.
அதை கேட்ட முத்துராமன் ஒரு வார்த்தை மட்டும் சொல்லி கிளம்பிவிட்டாராம். அதாவது நீங்கள் சொன்ன இந்தக் கம்பெனிகள் எல்லாம் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாதவர்கள் தானே என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம். அதன் உள்கூற்று என்னவென்றால் அந்த நேரத்தில் அந்தக் கம்பெனிகள் எல்லாம் கொடிகட்டி பறந்த நிறுவனங்கள்.
அவர்களுக்காக கரம் நீட்டிய ரஜினி பணக் கஷ்டத்தில் இருந்த எனக்காக ஏதாவது உதவி செய்திருக்கலாம். ஆனால் இன்று வரை இல்லை என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டு கூறியிருந்தார் அந்தப் பேட்டியில். அப்போது அந்தப் படப்பிடிப்பில் இருந்த பாரதிராஜா அவரிடம் போய் நீங்கள் சொன்னது சரியாக இருந்தாலும் சொன்ன இடம் தான் தவறு என்று கூறினாராம்.
இறுதியாக முத்துராமன் கூறும் போது ரஜினிக்கு படவாய்ப்பை வழங்கியதை நான் செய்த உதவி என்று நினைத்திருக்க கூடாது. அப்படி நினைத்ததனால் தான் அவரிடம் உதவி என்று போய் நின்றேன் என்று கூறியிருந்தார்.