அஜித்தை டப்பிங் பேசவிடாமல் தடுத்த தயாரிப்பாளர்!.. அவமானங்களை தாண்டி சாதித்த ஏகே!..
நடிகர் அஜித்தின் அம்மா குஜராத்தை சேர்ந்தவர். அப்பாவோ மலையாளி. ஆனால், அவரின் குடும்பம் பல வருடங்களுக்கு முன்பே சென்னையில் செட்டில் ஆனதால் அஜித் தமிழையும் கற்றுக்கொண்டார். ஆனால், அவருக்கு தமிழ் சரளமாக பேச வராது. அவரின் தமிழ் உச்சரிப்பு வேறு மாதிரி இருக்கும்
அதனால்தான் அவர் அறிமுகமான அமராவதி படத்தில் கூட அவரின் சொந்த குரலில் பேசி நடிக்கவில்லை. அதன்பின்னரும் சில படங்களில் அவருக்கு வேறு ஒருவர்தான் டப்பிங் பேசினார். வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஆசை’ படத்தில் கூட நடிகர் சுரேஷ்தான் அஜித்துக்கு குரல் கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: என்னய்யா படம் எடுத்து வச்சிருக்க? குப்ப படம் – அஜித் படத்தால் இயக்குனரை காரித்துப்பிய ரசிகர்கள்
முதன் முதலில் அஜித் சொந்த குரலில் பேசி நடித்தது அகத்தியன் இயக்கிய ‘வான்மதி’ திரைப்படம்தான். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார். சுவாதியின் அம்மாவாகவும், படத்தின் வில்லியாகவும் நடிகை வடிவுக்கரசி நடித்திருந்தார். இந்த படம் 1996ம் வருடம் வெளியானது.
இந்த படத்தில் அஜித்தையே டப்பிங் பேச வைத்தார் அகத்தியன். ஆனால், அவர் பேசியது அப்படத்தின் தயாரிப்பாளுக்கு பிடிக்கவில்லை. அஜித் பேசும் தமிழ் புரியவே இல்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு, வேறு ஒருவரை வைத்து அஜித்துக்கு குரல் கொடுக்கும்படியும் அவர் சொல்லிவிட்டார்.
இதையும் படிங்க: பைக்கையே தொடக் கூடாதுனு சொன்னவர் ஷாலினி! இப்போது அஜித்தை அவர் விருப்பப்படி விட என்னக் காரணம் தெரியுமா?
அஜித் ஏற்கனவே டப்பிங் பேசியிருந்த சில காட்சிகளை அகத்தியன் தயாரிப்பாளருக்கு போட்டு காட்டியும் தயாரிப்பாளர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன்பின் அப்படத்தில் நடித்த வடிவுக்கரசியும் தயாரிப்பாளரிடம் சொல்லிய பின்னரே அஜித் டப்பிங் பேச தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். எனவே, வான்மதி படம்தான் அஜித் தான் நடித்த படத்திற்கு தானே குரல் கொடுத்த முதல் படமாக அமைந்தது.
அதேநேரம், அஜித் பேசும் தமிழை மிமிக்ரி கலைஞர்கள் பல வருடங்களாக கிண்டலடித்து மேடைகளில் பேசி வந்தனர். இதுபற்றி ஒருமுறை விளக்கமளித்த அஜித் ‘என் வீட்டில் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்து பேசுவோம். அதனால், என்னுடைய தமிழ் உச்சரிப்பு அப்படி இருக்கிறது’ என சொன்னார். ஆனாலும், தொடர்ந்து நன்றாக பேசப்பழகி பெரிய மாஸ் ஹீரோவாகவும் அஜித் மாறியிருக்கிறார்.
இதையும் படிங்க: தனுஷை போல அஜித்தை மாற்றுவாரா வெற்றிமாறன்?!.. இனிமே வேற ரூட்டில் பயணிப்பாரா ஏகே?…