ரஜினி கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த தயாரிப்பாளர்!..பாதியிலேயே விடப்பட்ட திரைப்படம்!..
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் ஒரு நல்ல நிலையை அடைய அவர் பட்ட பாடு என்னவென்று பல மேடைகளில் அவர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். ஒரு தயாரிப்பாளருக்கே சவால் விட்ட சம்பவத்தையும் நாம் அறிந்திருக்கிறோம். இந்த நிலையில் அப்படி பட்ட ஒரு சம்பவத்தை தான் இயக்குனரும் தயாரிப்பாளருமான காரைக்குடி நாராயணன் தெரிவித்தார்.
அவர் சொந்தமாக எழுதிய ஒரு நாடகத்தை படமாக்க எண்ணியபோது ‘உன்னிடம் மயங்குகிறேன்’ என்ற பெயரில் அந்த நாடகம் தயாரானது. அந்த படத்தில் ஹீரோவாக விஜயகுமாரும் ஹீரோயினாக மஞ்சுளாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். வில்லன் கதாபாத்திரத்திற்கு ரஜினி தேர்வானார். படம் கிட்டத்தட்ட 11000 அடி தயாரிக்கப்பட்டு விட்டதாம். இன்னும் ஒரு மூன்று நாள் தான் படம் எடுக்கப்பட வேண்டியதாக இருந்ததாம். அந்த படத்தை பீம்சிங் தான் இயக்கினார். எதிர்பாராத விதமாக பீம்சிங் இறந்து போக படம் எடுப்பதில் தொய்வு ஏற்பட
அந்த இடைப்பட்ட காலத்தில் முள்ளும் மலரும்,பைரவி போன்ற படங்களில் நடித்து ரஜினி ஒரு உச்ச நிலையில் பிஸியாக இருந்தார். முதலில் உன்னிடம் மயங்குகிறேன் படத்திற்காக ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளம் 3000 ரூபாய். பிஸியாக இருக்கும் ரஜினியிடம் சொல்ற விதத்தில் சொல்லியிருந்தால் கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்க வந்திருப்பார் ரஜினி. ஆனால் தயாரிப்பாளரோ பேசுன படி சம்பளத்தை கொடுத்தாச்சு, ஒழுங்கா நடித்து விட்டு போ என்ற ஒரு அகம்பாவத்தை ஏற்படுத்த ரஜினி நடிக்க மாட்டேன் என்று போய்விட்டாராம்.
ஒரு நேரத்தில் ரஜினி ஒரு நாளைக்கு 10000 ரூபாய் வீதம் 3 நாள்களுக்கு 30000 ரூபாய் கேட்டாராம். அதற்கும் ஒப்புக் கொள்ளவில்லையாம் தயாரிப்பாளர். அதிலிருந்து அந்த படமும் கைவிடப்பட்டது. காரைக்குடி நாராயணனுக்கும் வரக்கூடிய வாய்ப்புகள் பறிபோனது. இதை ஒரு பேட்டியில் காரைக்குடி நாராயணனே தெரிவித்தார்.