நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் 27 வருடங்கள் மேனேஜராக இருந்தவரும், விஜய் நடித்த புலி படத்தை தயாரித்த தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் சமீபத்தில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து விஜயை மிகவும் கோபமாக விமர்சனம் செய்திருக்கிறார்.
விஜயிடம் 27 வருடங்கள் நான் மேனேஜராக இருந்திருக்கிறேன்.. எனக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும். விஜயின் அப்பா எஸ்.ஏ.சி மகனை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டார்.. ஏனெனில் அவரின் கடைசி கால சடங்குகளில் செய்ய மகன் வேண்டும் என ஆசைப்படுகிறார்.. அவருக்கு இருப்பது ஒரு மகன்தான்.. ஆனால் விஜய் அவரின் அப்பாவை எப்போவே விட்டுக் கொடுத்து விட்டார்.. அப்பாவை அவர் மதிப்பதே இல்லை. எந்த மேடையிலாவது அப்பா என தந்தையே மேடை ஏற்றியிருக்கிறாரா?..

ரசிகர்கள் நடிகர்களை நம்பி போகக்கூடாது.. ஜனநாயகன் படத்தைப் பொறுத்தவரை அது முழுக்க முழுக்க விஜயின் தவறு.. 6 மாதங்களுக்கு முன்பே ஷூட்டிங்கை முடித்துவிட்டார்கள்.. ஆனால் மிகவும் கால தாமதமாக சென்சாருக்கு அனுப்பினார்கள்.. சென்சாருக்கென சில விதிமுறைகள் இருக்கிறது. அதைத்தான் அவர்கள் பின்பற்றுவார்கள்.. இவர்கள் ரிலீஸ் செய்தியை அறிவித்துவிட்டு சென்சாருக்கு அனுப்பினால் அது முழுக்க முழுக்க இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் தவறு.. விஜயின் தவறும் கூட.
இப்ப நான் உங்களிடம் பேசுகிறேன்.. ஆனால் விஜய் எந்த செய்தியாளரையும் சந்திப்பதில்லை.. இவ்வளவு தமிழ் ஊடகங்கள், தமிழ் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு எங்கோ வட மாநிலத்தை சேர்ந்த என்டிடிவி சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.. அதை பேட்டி எனவும் சொல்ல முடியாது.. இப்படி ஒரு அரசியல்வாதி யாராவது பார்க்க முடியுமா?’ என பொங்கியிருக்கிறார்.



