விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். சினிமா பின்புலமே இல்லாத விஜய் சேதுபதி தனது சொந்த முயற்சியினால் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றாலும் பின் மெல்ல மெல்ல தனது நடிப்பின் மூலம் தனக்கான இடைத்தை பிடித்து கொண்டார்.
இவர் எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். பின் இவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜா இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது என்றாலும் இதன்பின் வெளியான சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் போன்ற திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.
இதையும் வாசிங்க:வாலியின் பாடல் பிடிக்காமல் கண்ணதாசனிடம் போன எம்.ஜி.ஆர்!… அட அந்த பாட்டா?!..
ஆனாலும் இவர் கதாநாயகனாக நடித்த வெகுசில படங்களே இவருக்கு கை கொடுத்தன. அதனால் ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் வில்லனாக நடிப்பதை விரும்ப ஆரம்பித்த இவர் முன்னணி நடிகர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
பேட்ட, மாஸ்டர், ஜவான் போன்ற திரைப்படங்களின் மூலம் வில்லனாக தனது கதாபாத்திரத்தை மிகசிறப்பாக வெளிக்காட்டினார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததில் இவருக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்த படம்தான் விக்ரம் வேதா. இப்படத்தினை இயக்குனர் புஷ்கர்-காயத்திரி இயக்கினார். இப்படத்தில் மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலெக்ஷ்மி சரத்குமார் போன்ற பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
இதையும் வாசிங்க:மிடில் க்ளாஸ் மாதவனாக வாழ்க்கையை ஆரம்பித்த சந்தானம்! தற்போதுள்ள சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இப்படத்தினை முதலில் எந்தவொரு வினியோகஸ்தரர்களும் வாங்கவில்லை. பின் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தரரான ரவீந்திரன் வாங்கியுள்ளார். யாருமே வாங்காத நிலையில் இப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என இவருக்கு தோன்றியதாம். மேலும் இப்படம் திரைக்கு வருவதற்கு முன் இவரின் நண்பர் ஒருவர் படத்தினை பார்த்துவிட்டு நீ தப்பிச்சிடுவ.. என கூறினராம்.
இவருக்கு அதை கேட்கவும் படம் நல்லா இருக்குனு சொல்லாம இப்படி சொல்றாரே என இன்னமும் பயம் அதிகமாகியிருந்ததாம். பின் தனது அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களிடம் படத்தை காண்பித்தாராம். அவர்கள் படத்தினை பார்த்துவிட்டு வேற லெவலில் இருக்கிறது என கூறியுள்ளனர். அப்போதுதான் ரவீந்திரன் நிம்மதியாகவும் தைரியமாகவும் இருந்தாராம்.
இதையும் வாசிங்க:விஜய்க்கு முன்னாடி தலீவர் ஜுஜுபி!.. தென்னை மரத்துல ஒரு குத்து.. பனை மரத்துல ஒரு குத்து!.. ப்ளூ சட்டை பலே!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…