Connect with us

திருமணமாகி ஒரே நாளில் ஆதங்கத்தை கொட்டிய ஃபேட்மேன் ரவீந்திரன்…! எல்லாத்துக்கும் காரணம் நயன் மேடமாம்…

ravi_main_cine

Cinema News

திருமணமாகி ஒரே நாளில் ஆதங்கத்தை கொட்டிய ஃபேட்மேன் ரவீந்திரன்…! எல்லாத்துக்கும் காரணம் நயன் மேடமாம்…

இரண்டு தினங்களுக்கு முன்பு ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் பெரும் பரப்பில் ஆழ்த்திய சம்பவம் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் – நடிகை மகாலட்சுமி திருமணம். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களின் திருமணம் காதல் திருமணம். திருப்பதியில் மிக எளிமையாக உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

RAVI!_cine

நடிகை மகாலட்சுமி சின்னத்திரையில் முன்னனி நடிகையாக இருக்கிறார். மேலும் ஆங்கராக இருந்த இவர் ஏராளமான சீரியல்களில் ஹீரோயினாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்று ஒரு குழந்தையும் இருக்கிறது.

ravi2_cine

இந்த நிலையில் தான் சாந்தனு நடித்த முருங்கைகாய் சிப்ஸ் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். நேற்று இவர்கள் பிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்த போது ரவீந்திரன் மிக ஸ்போர்ட்டிவாக பேசினார். மேலும் எங்களை பற்றி தவறாக பேசியவர்களை பற்றி எனக்கு கவலையில்லை எனக் கூறி மகாலட்சுமிக்கி இதுவரை எந்த கிஃப்டும் வாங்கி கொடுக்கவில்லை. அப்படி வாங்கி கொடுத்தால் என் மனைவியாக்கிய பிறகு தான் வாங்கிகொடுக்கனும் என்ற முடிவில் இருந்ததாக கூறி

ravi3_cine

கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறை பற்றி கூறினார். அதாவது நான் தாலி செயின் தான் போடனும் என்று இருந்தேன் .ஆனால் மகாலட்சுமி தான் தொங்க தொங்க மஞ்சள் கயிறு வேண்டும் என கூறினாள். எல்லாம் இந்த நயன்தாரா மேடம் பண்ண வேலைதான். அவங்களும் அப்படி தான் போட்டிருக்காங்க என கூறியதும் மகாலட்சுமி இல்ல இல்ல இதை நான் ஒரு வருடத்திற்கு முன்னாடியே இவரிடம் சொன்னதாக கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top