இதெல்லாம் ஒரு காமெடியா?- வடிவேலுவின் மிக பிரபலமான நகைச்சுவை காட்சிக்கு முட்டுக்கட்டை போட்ட தயாரிப்பாளர்…
வடிவேலு தமிழ் சினிமாவின் நகைச்சுவை சூறாவளியாக வலம் வந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களுக்கு எப்போதும் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருப்பவை. தமிழ் சினிமா உள்ளவரை வடிவேலுவின் நகைச்சுவையும் நிலைத்திருக்கும். அந்தளவுக்கு அவரது புகழ் ரசிகர்களிடையே பரவியிருக்கிறது.
இந்த நிலையில் வடிவேலுவின் பிரபல நகைச்சுவை காட்சி ஒன்றை “இதெல்லாம் ஒரு காமெடியா?” என கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர். இந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
1999 ஆம் ஆண்டு ரஞ்சித், பிரியா ராமன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நேசம் புதிது”. இத்திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை பகுதிகள் மிகப் பிரபலமானவை. குறிப்பாக “கைய பிடிச்சி இழுத்தியா” என்ற காமெடி காட்சியை நம்மால் மறந்திருக்கமுடியாது.
இந்த காமெடி காட்சிகளை எழுதியவர் வேல்முருகன் என்பவர். இந்த காமெடி காட்சியில் வடிவேலு உட்பட பயில்வான் ரங்கநாதன், தயாரிப்பாளர் சங்கிலி முருகன் போன்ற பலரும் இடம்பெற்றிருந்தனர். இந்த காமெடி காட்சியை படமாக்கும்போது இந்த காட்சியில் நடித்த சங்கிலி முருகன், “கைய பிடிச்சி இழுத்தியா, கைய பிடிச்சி இழுத்தியா இது தவிர வேற எதுவும் இதுல இல்லையே. இதுலாம் ஒர்க் அவுட் ஆகுமா எப்படி?” என கேட்டாராம்.
அதே போல் வடிவேலுவுக்கும் இந்த காட்சியில் அவ்வளவாக நம்பிக்கை இல்லையாம். ஆனால் வேல்முருகனோ “நிச்சயமாக இந்த காமெடி சிறப்பாக வரும்” என நம்பிக்கையாக கூறினாராம். இத்திரைப்படம் வெளிவந்த பின் அந்த காமெடி காட்சி மிகப் பிரபலமான காமெடி காட்சியாக ஆனது. அதன் பின் ஒரு நாள் வேல்முருகனை சந்தித்த சங்கிலி முருகன், “நானும் நிறைய படத்துல நடிச்சிருக்கேன். ஆனா இப்படி ஒரே ஒரு காமெடி காட்சி மூலமா என்னைய பிரபலமாக்கிவிட்டியேப்பா” என பாராட்டினாராம்.
இதையும் படிங்க: அந்த ரெண்டு படமும் ஓடியிருக்க கூடாது!.. நல்ல சினிமா எப்படி வரும்?.. ஆதங்கப்பட்ட கமல்!..