வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இதில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது.
ஸ்டண்ட் கலைஞருக்கு நேர்ந்த விபத்து
டிரைலர் பார்க்கையில் சூரி, மிகவும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என தெரியவருகிறது. இதனிடையே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் கலைஞரான சுரேஷ் குமார் என்பவர் 15 அடி உயரத்தில் சண்டை காட்சிக்கான ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக கேபிள் அறுந்ததால், கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இச்சம்பவம் திரை உலகினரை சோகத்திற்குள்ளாக்கியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், இத்திரைப்படத்தில் பணியாற்றிய தமிழ் ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் தெலுங்கு ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதல்தான் இந்த விபத்திற்கு காரணம் என கூறினார்.
உண்மையை உடைத்த தயாரிப்பாளர்
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர், “விடுதலை படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் கலைஞர் இறந்ததற்கு காரணம், தெலுங்கு மற்றும் தமிழ் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இடையிலான ஒத்துழையாமைதான் என்று சொல்கிறார்களே அது உண்மையா, உங்களுடைய கருத்து என்ன?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு இடையே ஒற்றுமை இல்லாததனால்தான் விடுதலை படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது என்று நீங்கள் கூறியிருக்கின்ற குற்றச்சாட்டு சரியான குற்றச்சாட்டு அல்ல.
குறிப்பிட்ட அந்த சண்டை காட்சியை படமாக்குவதற்கு முன்னாலே பல நாட்களாக அதற்கான ஒத்திகை நடைபெற்றது. அந்த ஒத்திகையில் பயிற்சி பெற்ற ஸ்டண்ட் கலைஞர், படப்பிடிப்பின்போது அந்த படப்பிடிப்பிற்கு வரவில்லை. அதன் காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டதாக நான் கேள்விபட்டேன்” என கூறியிருக்கிறார்.
அதாவது அத்தனை நாள் ஒத்திகை பார்த்த ஸ்டண்ட் கலைஞர் படப்பிடிப்பின்போது வராத காரணத்தால்தான், அந்த நாளில் சுரேஷ் குமார் அவருக்கு பதில் அந்த சண்டைக்காட்சியில் ஈடுபட இருந்ததாகவும் அதனால்தான் விபத்து நடந்ததாகவும் இதில் இருந்து தெரியவருகிறது.
இதையும் படிங்க: உயிர்போகும் நிலையில் இருந்த ஹிட் பட தயாரிப்பாளர்… எட்டிக்கூட பார்க்காத சிம்புவும் தனுஷும்… அடப்பாவமே!
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…