கார்த்திக்கை வைத்து படம் எடுத்து நொந்துப்போன தயாரிப்பாளர்.. ஏழரை சனி சுத்தி வளைச்சி கும்மியடிச்சிருக்கே…

by Arun Prasad |   ( Updated:2023-03-04 13:32:51  )
Karthik
X

Karthik

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மாணிக்கம் நாராயணன். இவர் “கூலி”, “வேட்டையாடு விளையாடு”, “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மாணிக்கம் நாராயணன், கார்த்திக்கை வைத்து படம் எடுத்து துயரப்பட்டதாக ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

Manickam Narayanan

Manickam Narayanan

கடந்த 2000 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், பி.வாசுவை சந்தித்து “என்னுடைய பேன்னருக்கு ஒரு படம் பண்ணுங்க” என கூறியிருக்கிறார். அதற்கு பி.வாசு, ஒரு காமெடி கதையை படமாக பண்ணலாம் என கூறியிருக்கிறார். ஆனால் மாணிக்கம் நாராயணனோ, மலையாளத்தில் வெளிவந்த “பரதம்” திரைப்படத்தை ரீமேக் செய்யலாம் என கூறியிருக்கிறார். பி.வாசுவும் “சரி” என ஒப்புக்கொள்ள, திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கியது.

இத்திரைப்படத்திற்கு “சீனு” என்று டைட்டில் வைக்கப்பட்டது. இதில் கதாநாயகனாக கார்த்திக்கை ஒப்பந்தம் செய்தனர். மேலும் பல நடிகர்களை ஒப்பந்தம் செய்தனர். எனினும் இதில் மிக முக்கிய கதாப்பாத்திரமான கார்த்திக்கின் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிக்க யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.

Seenu

Seenu

இந்த நிலையில் பி.வாசுவே இத்திரைப்படத்தில் நடிப்பதாக முடிவு செய்துள்ளார். ஆனால் மாணிக்கம் நாராயணனுக்கோ இதில் விருப்பம் இல்லை. எனினும் அவர் தடுக்கவில்லை. இதனை தொடர்ந்து படப்பிடிப்புத் தொடங்கியது. ஆனால் கார்த்திக் படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லையாம். எனினும் எப்படியோ சமாளித்து படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.

இதன் பிறகு டப்பிங் பணிகள் தொடங்கியிருக்கிறது. ஆனால் கார்த்திக் டப்பிங்கிற்கு வரவே இல்லையாம். பல முறை அவரது வீட்டிற்குச் சென்று அழைத்தும் அவர் வரவில்லையாம். ஒரு கட்டத்தில் மிகவும் கடுப்பான மாணிக்கம் நாராயணன், கார்த்திக்கிடம் “எனக்கு சினிமாத் துறையில் நல்ல பெயர் இருக்கிறது. அதை கெடுத்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா? உனக்கான முழு சம்பளத்தையும் நான் தந்துவிட்டேன். பின்பு ஏன் டப்பிங்கிற்கு வர மறுக்கிறாய்?” என்று தொலைப்பேசியில் கேட்டிருக்கிறார்.

P Vasu

P Vasu

அதற்கு கார்த்திக், “சார், நான் உங்க பெயரை கெடுக்கனும்ன்னு நினைக்கலை. நான் கண்டிப்பா டப்பிங் பேச வரேன். இன்னைக்கு 7 மணிக்கு நான் ஸ்டூடியோவுக்கு வரேன். ஆனால் உங்கள் முகத்தை பார்க்க எனக்கு சங்கடமாக இருக்கும். ஆதலால் நான் வருவதற்கு முன்பே கிளம்பிவிடுங்கள்” என கூறியிருக்கிறார்.

அதே போல் கார்த்திக் வருவதற்கு முன்பே மாணிக்கம் நாராயணன் தனது வீட்டிற்கு கிளம்பிவிட்டாராம். கார்த்திக், தான் சொன்னபடி மாலை 7 மணியில் இருந்து காலை 5 மணி வரை டப்பிங் பேசி முடித்துவிட்டுச்சென்றிருக்கிறார்.

Karthik

Karthik

அதன் பின் இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தபிறகு, படக்குழுவினர் முழு படத்தையும் திரையிட்டு பார்க்க முடிவெடுத்தார்கள். அதன் படி ஒரு திரையரங்கில் திரையிடத் தொடங்கினார்கள். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே மாணிக்கம் நாராயணன் படத்தை நிறுத்தச் சொல்லிவிட்டாராம்.

“இந்த படம் ஓடிச்சினா என் காதை அறுத்துக்கிறேன்” என கூறியிருக்கிறார். அதன் பின் சில காட்சிகளை படமாக்க சொல்லி அதனை அதனோடு சேர்த்து படத்தை வெளியிட்டிருக்கிறார். மாணிக்கம் நாராயணன் கூறியபடியே அத்திரைப்படம் படுதோல்வியடைந்தது.

Manickam Narayanan

Manickam Narayanan

இது குறித்து அப்பேட்டியில் மாணிக்கம் நாராயணன் பேசியபோது, “பி.வாசு முதலில் ஒரு காமெடி படத்தை எடுக்கலாம் என கூறினார். நான்தான் பரதம் படத்தை ரீமேக் செய்யலாம் என கூறினேன். இது நான் செய்த மிகப்பெரிய தவறு” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கண்ணதாசன் பாடலால் கிளம்பிய சர்ச்சை… சென்சார் போர்டில் நடந்த வாக்குவாதம்…

Next Story