யாருக்காகவும் தன் கொள்கையை விட்டு கொடுக்காத எஸ்.எஸ்.வாசன்!.. எம்ஜிஆருக்காக கொடுத்து ஆச்சரியப்பட வைத்த தருணம்!..
அன்றை சினிமா காலகட்டத்தில் எம்ஜிஆரின் பல படங்களை தயாரிக்கும் தேவர் பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ், மேகலா பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் மத்தியில் எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சற்று வித்தியாசனமானது. எம்ஜிஆரின் முதல் படமான சதிலீலாவதி படத்தை தயாரித்த நிறுவனமும் இந்த ஜெமினி ஸ்டூடியோஸ் தான்.
இந்த நிலையில் எம்ஜிஆரின் 100 வது படத்தை தயாரிக்கும் போட்டியில் பல நிறுவனங்கள் ஈடுபாடு கொண்டிருந்தது. இதற்கிடையில் எம்ஜிஆர் அந்த பொறுப்பை ஜெமினி ஸ்டூடியோவிற்கு கொடுத்தார். எம்ஜிஆர் மற்றும் எஸ்.எஸ்.வாசன் இருவருக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருக்கின்றது.
இதையும் படிங்க : வயிறு எரிஞ்சி சாபம் விடுறேன்!.. டேய் பாலா இனிமேலாவது திருந்து!. நான் கடவுள் நடிகர் பேட்டி…
இருவரும் தங்கள் கொள்கைகளில் இருந்து மீளாதவர்கள். எம்ஜிஆரின் 100 வது படமான ஒளிவிளக்கு எம்ஜிஆரின் கெரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அதுவரை தன்னுடைய படங்களில் புகைப்பிடிப்பதை தவிர்த்து வந்த எம்ஜிஆர் ஒளிவிளக்கு படத்தில் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
மேலும் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் தைரியமாக எம்ஜிஆரும் சரி எஸ்.எஸ்.வாசனும் சரி துணிந்து இறங்கி படத்தை வெளியிட்டார்கள். ஆனால் படமோ மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் ஜெயலலிதா இந்த படத்தில் சற்று க்ளாமர் ரோலில் நடித்திருந்தார்.
ஒரு பக்கம் சௌகார் ஜானகி அவருடைய கதாபாத்திரத்தில் மிகவும் ஜொலித்திருப்பார். இந்த நிலையில் ஜெமினி ஸ்டூடியோஸ் மூலம் எஸ்.எஸ்.வாசன் தான் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் தான் படப்பிடிப்பு நடத்த சம்மதம் தெரிவிப்பார். ஸ்டுடீயோவில் மற்ற படங்களில் படப்பிடிப்பு நடத்துவதை விரும்ப மாட்டாராம் எஸ்.எஸ்.வாசன்.
ஆனால் முதன் முறையாக எம்ஜிஆருக்காக அந்த கொள்கையை மாற்றிக் கொண்டவர் எஸ்.எஸ்.வாசன். ஒளிவிளக்கு முன்னாடி அவர் நடித்த குடியிருந்த கோயில் படத்தின் படப்பிடிப்பு ஜெமினியில் தான் நடந்திருக்கிறது. அந்த படப்பிடிப்பு சமயத்தில் தான் வாசன் எம்ஜிஆரிடம் வந்து தங்களின் 100 வது படத்தை தயாரிக்கும் பொறுப்பை எனக்கு தரவேண்டும் என கேட்டிருக்கிறார் வாசன். அதன் பேரிலேயே ஒளிவிளக்கு படத்தை ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது.