கோப்ரா இயக்குனருக்கு ரெட் கார்டு!...வெற்றிமாறனுக்கு செக் வைத்த தாணு....
டிமாண்டி காலணி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகி சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்களை கவராமல் படுதோல்வி அடைந்தது.
கூறிய பட்ஜெட்டை விட பல பல மடங்கு செலவு செய்து இப்படத்தை எடுத்தார் அஜய் ஞானமுத்து. இப்படத்தால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் மூலம் அஜய் ஞானமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோப்ரா பட தயாரிப்பாளர் ஆலோசித்து வரும் நிலையில், அஜய் ஞானமுத்துவுக்கு ரெட் கார்டு போட வேண்டும் என பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பாளர் சங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம்.
இவர் ஏன் முந்தி கொண்டு அதை செய்கிறார் என்பதற்கு பின்னணியில் ஒரு காரணமும் இருக்கிறதாம். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் திரைப்படம் கிடப்பில் கிடக்கிறது. வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். எப்படியும் இப்படம் முடிய இன்னும் 4 மாதங்கள் ஆகும்.
அதன்பின் வாடிவாசல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கூறிய பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் எடுத்து வெற்றிமாறான் செலவை இழுத்துவிட்டால் என்ன செய்வது என்பதற்காக அஜய் ஞானமுத்துவை எச்சரிப்பது போல் மறைமுகமாக வெற்றிமாறனை அவர் எச்சரிக்கிறார் என பேச துவங்கியுள்ளது கோலிவுட் வட்டாரம்.