பட வாய்ப்பை தட்டிவிட மூன்று மடங்கு சம்பளம் கேட்ட உச்ச நடிகர்… தாணு சொன்ன ஷாக்கிங் தகவல்!

டிஸ்டிபியூட்டராக இருந்து சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளராக மாறியவர் தான் கலைப்புலி எஸ். தாணு. இவரின் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. தமிழ் சினிமாவின் உச்ச நாயகர்கள் இவர் படங்களை மிஸ் செய்ததே இல்லை. அதிலும் இவரின் தயாரிப்பில் அதிக படங்களை நடித்தவர் விஜயகாந்த் தான்.

சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் விஜயகாந்த் குறித்தும் அவருடனான நட்பு குறித்தும் நிறைய பேசி இருக்கிறார். அதில் இருந்து, விஜயகாந்தின் உடல் ஆரோக்கியம் குறித்து நிறைய கவலைப்பட்டு இருக்கிறேன். அவரை பார்க்க போகும் போது இரண்டாவது மகனை அழைத்து இவர் தான் உன் படத்தினை தயாரிக்க போவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..

என்னுடைய யார் படத்துக்கு அர்ஜூனுக்கு பதில் அவரிடம் தான் கால்ஷூட் கேட்டு இருந்தோம். அதே நேரத்தில் ஊமை விழிகள் படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டு இருந்தது. யார் படத்துக்கும் நைட் கால்ஷூட் வேண்டும் என்பதால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

அந்த படத்தினை தொடர்ந்து மீண்டும் அவரினை தயாரிக்க எண்ணி கால்ஷூட்டுக்காக போய் நின்றேன். அப்போது அவர் எனக்கு ஓகே என் நண்பர் ராவுத்தரை பார்த்து விட்டு அவர் மூலமாக வந்து விடுங்கள் எனக் கூறினார். நானும் ராவுத்தரை போய் பார்த்தேன். என்னை தவிர்க்க நினைத்தவர். அவர் அப்போது வாங்கிய சம்பளத்தினை விட மூன்று மடங்கு அதிகமாக கேட்டார். நான் கொஞ்சமும் யோசிக்கவே இல்லை. உடனே ஒப்புக்கொண்டேன். அவர் இதை எதிர்பார்க்கவே இல்லை. நான் கணக்கே பார்ப்பது இல்லை.

இதையும் படிங்க : இந்த நடிகர மட்டும் வச்சு நான் டைரக்ட் பண்ண மாட்டேன்! ஷாக் தகவலை கூறிய தளபதி வாரிசு

அந்த படத்தின் விளம்பரம் மிகச்சிறப்பாக செய்தேன். அவருடைய பட வசூல் ஒரு கோடியை தாண்டியது. அதன் பின்னர் என்னுடைய அணுகுமுறையால் அவருக்கு என்னை பிடித்து விட்டது. என்னிடம் நீங்க யாரையும் பார்க்க வேண்டாம். இனி உங்களுக்கு வருடம் ஒரு படம் செய்கிறேன் என்றார். என்னை அவர் குடும்பத்தில் ஒருவனாக பார்த்தார்.

ஆனால் கூட அவருடன் என்னால் மூன்று படங்களில் மட்டுமே பணியாற்ற முடிந்தது. அதற்கு அவரின் பிஸி ஷூட்டிங் தான் காரணமாக அமைந்தது. அவரின் மண்டபம் திறந்தவுடன் என்னுடைய மகள் திருமணம் தான் முதன்முதலில் நடந்தது. அப்படிப்பட்டது எங்களின் நட்பு. அவர் திருமணத்துக்கு கலைஞர் தலைமை தாங்க வேண்டும் என அவர் விரும்பிய போது நானே போய் பார்த்து அவரிடம் அனுமதி வாங்கி கொடுத்தேன் எனக் குறிப்பிட்டார்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it