எம்.ஜி.ஆரே இல்லாமல் எம்.ஜி.ஆரை வைத்து படமாக்கிய பிரபல இயக்குனர்… கேட்கவே ஆச்சரியமா இருக்கே!!
1956 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், பானுமதி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அலிபாபாவும் 40 திருடர்களும்”. இத்திரைப்படத்தை மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தாரான டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தென்னிந்தியாவின் முதல் கலர் திரைப்படமாக வெளிவந்தது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டியதாக இருந்தது. அந்த தருணத்தில் எம்.ஜி.ஆர் பல திரைப்படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் அவரால் சரியாக கால்ஷீட் கொடுக்கமுடியவில்லையாம்.
ஆதலால் அந்த பாடல் காட்சியை எம்.ஜி.ஆர் போலவே ஒரு டூப்பை வைத்து படமாக்கி முடித்துவிட்டாராம் டி.ஆர்.சுந்தரம். அதன் பின் ஒரு நாள் எம்.ஜி.ஆர், டி.ஆர்.சுந்தரத்திடம் “ஒரு பாடல் காட்சி படமாக்கவேண்டும் என்று கூறினீர்களே. எப்போது படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்” என கேட்டாராம்.
அதற்கு டி.ஆர்.சுந்தரம் “அந்த பாடல் காட்சி என்றைக்கோ படமாக்கி முடிச்சாச்சே. நீங்க பிரிவ்யூ போய் பாருங்க ராமச்சந்திரன்” என்று கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு அப்படியே ஷாக் ஆகிவிட்டதாம். “நான் இல்லாமால் எப்படி இவர் படமாக்கினார்” என்று அந்த பாடலை பிரிவ்யூவில் பார்த்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
பாடலை பார்த்ததும் அப்படியே அசந்துப் போய் விட்டாராம். அதில் இடம்பெற்றது எம்.ஜி.ஆர் இல்லை என கண்டே பிடிக்கமுடியவில்லையாம். அந்த அளவுக்கு மிகவும் நேர்த்தியாக அந்த பாடலை படமாக்கியிருந்தாராம் டி.ஆர்.சுந்தரம்.
ஆனால் நாம் இல்லாமல் இப்படி டூப் போட்டி எடுத்துவிட்டாரே என்று டி.ஆர்.சுந்தரத்தின் மேல் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சம் வருத்தம் இருந்ததாம். ஆதலால் “அலிபாபாவும் 40 திருடர்களும்” திரைப்படத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர், மார்டன் தியேட்டர் தயாரிப்பில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லையாம்.