மார்க்கெட் இழந்த அப்பாஸை ஹீரோவாக வைத்து படமெடுக்க வந்த தயாரிப்பாளர்… ஆனால் நடந்தது என்னமோ வேற…
அப்பாஸ் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்தவர். மேலும் இளம் பெண்களின் மத்தியில் ஒரு கனவு கண்ணனாகவும் திகழ்ந்தார். பல திரைப்படங்களில் தனது வசீகரமான நடிப்பால் பலரையும் கவர்ந்திழுத்தார் அப்பாஸ்.
எனினும் எல்லா நடிகர்களுக்கும் ஒரு காலகட்டத்தில் எப்படி சரிவு வருமோ, அது அப்பாஸுக்கும் நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்தார் அப்பாஸ். அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரவில்லை.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது பேட்டி ஒன்றில் அப்பாஸை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது செய்யாறு பாலு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது "காணாமல் போன நட்சத்திரங்கள்" என்ற ஒரு தலைப்பில் மார்க்கெட் இழந்த நடிகர்களை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தாராம்.
அந்த சமயத்தில் அப்பாஸிடம் பேட்டி எடுக்க அவரை அணுகியிருக்கிறார் செய்யாறு பாலு. அப்போது அப்பாஸை பார்க்க ஒரு தயாரிப்பாளர் கையில் பல லட்ச ரூபாயுடன் அங்கே நின்றுகொண்டிருந்தாராம். அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வந்திருக்கிறார். அப்போது செய்யாறு பாலுவிடம் அப்பாஸ், "பாருங்க சார், இவர் என்னைய வச்சு படம் எடுக்குறதுக்காக கையில் பணப்பெட்டியோட வந்து நிக்கிறாரு" என சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, "இவரிடம் நான் இந்த பணத்தை அப்படியே கொண்டுபோய்விடுங்கள், வீணாக செலவு செய்து நஷ்டத்தில் விழுந்துவிடவேண்டாம் என்று சொல்லப்போகிறேன். மார்க்கெட் போனாலுமே சில நடிகர்களுக்கு ஓரிரு தயாரிப்பாளர்கள் எப்படியோ அமைந்துவிடுவார்கள்" எனவும் செய்யாறு பாலுவிடம் அப்பாஸ் கூறினாராம்.
அப்பாஸ் தற்போது நியூஸிலாந்து பகுதியில் வசித்து வருகிறார். மார்க்கெட் இழந்த பிறகு நியூஸிலாந்தில் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியராக வேலைக்கு சேர்ந்த அப்பாஸ், பெட்ரோல் பல்க்கில் பெட்ரோல் போடுவது, மெக்கானிக் வேலை என சிறு சிறு வேலைகளையும் பார்த்து வருகிறார். எனினும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார் அப்பாஸ்.
இதையும் படிங்க: அந்த விபத்து எல்லாத்தையும் மாத்திடுச்சு!.. ஹீரோ வாய்ப்பை இழந்து காமெடியனாக மாறிய ஜனகராஜ்!..