மகாநதி படத்தைப் பார்த்துட்டு தயாரிப்பாளர் செய்த ரகளை...! கமல் வீட்டுக்கே போயிட்டாரே..!

by sankaran v |   ( Updated:2024-11-13 20:57:44  )
Kamal mahanadhi
X

Kamal mahanadhi

தயாரிப்பாளர் வி.ஞானவேல் சினிமாவை ரசிக்க ரசிக்கப் பார்க்கக்கூடியவர். பாராட்ட வேண்டும் என்றால் முரட்டுத்தனமாகப் பாராட்டுவாராம். அப்படி ஒரு சுவையான சம்பவத்தை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க...

ஏப்ரல் மாதத்தில்

கமலின் மகாநதி படம் அற்புதமான காவியம். கர்சீப்பை எடுக்கலாமான்னு வரும். அப்படி எடுத்துத் துடைக்கலாமான்னு வரும். அப்படி ஒரு காட்சி வரும். அப்படி ஒரு படம் ஏப்ரல் மாதத்தில்.

Also read: உலகநாயகனுக்கே சோதனையா…? ஏர்போர்ட்ல நாலு மணி நேரமாக கமலுக்குத் தொல்லை…!

மூன்றாம்பிறை படம் பார்த்துட்டு பாலுமகேந்திரா வீட்டு வாசல்ல நின்னு பயங்கரமா வாழ்த்தினேன். மகாநதி படம் பார்த்துட்டு கமல் வீட்டுக்கு சண்டைக்குலாம் போயிருக்கேன். சினிமா வெறி பிடிச்சவன் நானு. மகாநதி படம் ரிலீஸ் ஆகி 3 நாள் ஆச்சு.

முரட்டுத்தனமா வாழ்த்து

'கமல் சார் வீட்டுக்குப் போயிட்டு வருமா'ன்னு கேட்கிறேன். அங்கே போனதும் 'சாரை எங்கே'ன்னு கேட்குறேன். 'டிஸ்கஷன்ல இருககாரு'ன்னு சொல்றாங்க. 'யோவ் நாங்க 3 நாளா படத்தைப் பார்த்துட்டு வேலைக்குப் போகாம இருக்கோம். கூப்பிடுய்யா அவரை...'ன்னு சொன்னேன்.

Producer vgnanavel

Producer vgnanavel

கொஞ்சம் முரட்டுத்தனமா இருப்பேன். நாங்க படத்தைப் பார்த்துட்டு மூணு நாளா வேலைக்குப் போகாம இருக்கோம். இவரு ரிலீஸ் பண்ணிட்டு அடுத்த படத்துக்குப் போறாரு? அந்த மாதிரி பாலுமகேந்திரா மேலும் மிகப்பெரிய ரெஸ்பெக்ட். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மகாநதி

1994ல் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் மகாநதி. கண்களைக் குளமாக்கி இருப்பார் கமல். அப்படி ஒரு அழுத்தமான கதை. அபாரமான நடிப்பு. இப்போது பார்த்தாலும் நாம் நிச்சயம் அழுதே விடுவோம். கமல், சுகன்யா, கொச்சி ஹனீபா, பூர்ணம் விஸ்வநாதன், ஷோபனா, எஸ்.என்.லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

16 வயதினிலே தயாரிப்பாளர்

Also read: போட்டோகிராபரிடம் எரிஞ்சி விழுந்த ரஜினி… சாயங்காலம் ஆனா அவருக்கு மூடே மாறிடுமாம்….!

இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே மாஸ். எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்த படம். இவர் ஏற்கனவே கமலின் 16 வயதினிலே படத்தைத் தயாரித்து இருந்தார். பேய்களா, ஸ்ரீரங்க ரங்கநாதனின், பொங்கலோ பொங்கல் உள்பட பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

Next Story