கோலிவுட்டுக்கு ஒரு நியாயம் பாலிவுட்டுக்கு ஒரு நியாயமா? தனுஷ் மீது கடுப்பில் படக்குழு...!

by ராம் சுதன் |
dhanush-malavika mohanan
X

கோலிவுட்டில் தற்போது டாப் நடிகராக வலம் வரும் தனுஷ் முன்னதாக பல படங்களில் அவரின் திறயையான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தட்டி சென்றுள்ளார். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று சாதனை படைத்த தமிழ் நடிகர் என்ற பெருமையும் தனுஷையே சேரும்.

தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள தனுஷ் நடிப்பில் இறுதியாக அசுரன் படம் மட்டுமே திரையில் வெளியானது. அதனை தொடர்ந்து வெளியான அனைத்து படங்களும் ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படமும் ஓடிடியில் தான் வெளியாக உள்ளது.

dhanush

dhanush

துருவங்கள் பதினாறு படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் நரேன் தான் தற்போது மாறன் படத்தை இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 11ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால் படக்குழுவினர் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார்கள். ஆனால் நடிகர் தனுஷ் மட்டும் மாறன் படத்தை புறக்கணித்து வருகிறாராம். தனுஷ் மாறன் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்பினாராம். ஆனால் அதற்குள் தயாரிப்பு தரப்பு படத்தை ஓடிடிக்கு விற்றுவிட்டதால் தனுஷ் கடுப்பாகி விட்டாராம்.

maaran

maaran

முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான சமயத்திலும் தனுஷ் அப்படத்தின் தயாரிப்பாளருடன் மோதலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கோலிவுட்டில் இப்படி கறார் காட்டும் தனுஷ், பாலிவுட்டில் மட்டும் சத்தம் இல்லாமல் இருக்கிறாராம்.

சமீபத்தில் ஹிந்தியில் அவர் நடித்த அட்ரங்கி ரே படமும் நேரடியாக ஓடிடியில் தான் வெளியானது. ஆனால் அப்போது மட்டும் தனுஷ் அப்படத்தை தீவிரமாக புரமோட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story