மார்க்கெட் ஏறட்டும் அப்புறம் பாப்போம்!..சசிக்குமார் நிலமை இப்படி ஆகிப்போச்சே!....
சுப்பிரமணியபுரம் என்கிற படத்தை இயக்கி நடித்து கோலிவுட்டை தன் பக்கம் திரும்ப வைத்தவர் சசிக்குமார். அதன்பின் முழுநேர நடிகராக மாறினார். அவர் நடிப்பில் சில படங்கள் ஹிட் அடித்தது. சில படங்கள் எதிரபார்த்த வெற்றியை பெறவில்லை. அவரின் நடிப்பில் உருவான பல படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமால் பொட்டியில் தூங்குகிறது.
கேரளாவில் ஹிட் அடித்த ஐய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வாங்கியுள்ளார். இதில், சசிக்குமாரும் வேறு ஒரு நடிகரும் நடிக்கவிருந்தனர். ஆனால், தற்போதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.
சசிக்குமாருக்கு தற்போது மார்க்கெட் பெரிதாக இல்லை என்பதாலும், அவர் நடிப்பில் உருவான சில படங்கள் வெளியாகமலே இருப்பதாலும் ஐயப்பனும் கோஷியும் ரீமேக்கை தற்போதைக்கு எடுக்க வேண்டாம் என அந்த தயாரிப்பாளர் கிடப்பில் வைத்துள்ளாராம். சசிக்குமாரின் படங்கள் வெளியாகி அவரின் மார்க்கெட் உயர்ந்தால் ஐய்யப்பனும் கோஷியும் பட ரீமேக் வேலையை துவங்குவோம் என அவர் கருதுகிறாராம்.
சசிக்குமார் நிலமை இப்படி ஆகிப்போச்சே!...