புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் - ஒரு கண்ணோட்டம்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் மட்டுமல்ல. கதை, திரைக்கதை, தொழில்நுட்பம், இசை என எல்லா விஷயங்களிலும் ஈடுபாடுடையவர். இவரது கலை நுணுக்கத்தை நாம் அவரது படங்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
சண்டைக்காட்சிகளில் வாள் சண்டை, கத்திச்சண்டை, கம்பு சண்டை என அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர். இவரது தேர்வில் பாடல்கள் அனைத்தும் செம சூப்பராக இருக்கும். இது அவரது தேர்ந்த இசைத்திறனைக் குறிக்கிறது.
நாடோடி மன்னன்
1957ல் எம்ஜிஆர் பிக்சர்ஸ் என்ற சொந்தப் பட நிறுவனத்தைத் தொடங்கினார். முதன் முதலாக நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்தார்.
அந்தப்படத்தைச் சிறந்த கலைப் படைப்பாக உருவாக்க விரும்பினார். அதனால் தாமே அதை இயக்கினார். பல பிரபலமான இயக்குனர்களும், தொழில் நுட்ப நிபுணர்களும் பிரபல பத்திரிகையாளர்களும் எம்ஜிஆரின் டைரக்ஷன் திறனை வியந்து போற்றினர்.
1958ல் படம் வெளியானது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் பாடல்கள் சூப்பர். தூங்காதே தம்பி தூங்காதே, உழைப்பதிலா, கண்ணில் வந்த மின்னல்போல் உள்பட பல பாடல்கள்உள்ளன.
அடிமைப்பெண்
1969ம் ஆண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா என இருவரும் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கிய படம். இந்தப் படத்தில் அம்மா என்றால் அன்பு என்ற பாடலை ஜெயலலிதாவே சொந்தக்குரலில் பாடி அசத்தியுள்ளார்.
சந்திரபாபு, சோ உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை எம்ஜிஆர் தயாரித்துள்ளார்.
உலகம் சுற்றும் வாலிபன்
1973ல் மக்கள் திலகம் தானே தயாரித்து இயக்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். மஞ்சுளா, லதா, சக்கரபாணி, நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் 10 பாடல்கள் உள்ளன.
அனைத்தும் முத்து. அவள் ஒரு நவரச, பன்சாயி, லில்லி மலருக்கு, நிலவு ஒரு பெண்ணாகி, பச்சைக்கிளி, சிரித்து வாழ வேண்டும், தங்கத் தோணியிலே, உலகம் உலகம், வெற்றியை நாளை ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
எம்ஜிஆர், லதா நடித்த இந்தப்படத்தை இயக்கியவர் எம்ஜிஆர். 1978ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸானது. எம்.எஸ்.வியின் இசையில் பாடல்கள் அனைத்தும் செம மாஸ்.
வீரமகன் போராட, தாயகத்தின் சுதந்திரமே, தென்றலில் ஆடிடும் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. வீரமகன் போராட, தாயகத்தின் ஆகிய மனது மறக்காத பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன.