ரஜினி கேட்ட எக்ஸ்ட்ரா ஆம்லேட்.. அசிங்கப்படுத்திய புரடெக்ஷன் பாய்.. இப்படியெல்லாம் நடந்துச்சா!..
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலச்சந்தரால் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் ரஜினி. அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வில்லனாக தொடர்ந்து நடிக்க துவங்கி, பைரைவி என்கிற படம் மூலம் ஹீரோவாக மாறினார். அதன்பின் பல ஹிட் படங்களில் கொடுத்து சூப்பர்ஸ்டாராக மாறினார். இப்போது வரை அவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.
வளரும் சமயத்தில் சினிமாவில் நிறைய அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், அதையெல்லாம் தாண்டி வெறியோடு உழைத்தால்தான் ஒரு இடத்திற்கு வரமுடியும். எந்த இடத்தில் அவனமானப்பட்டோமோ அதே இடத்தில் உயர்ந்து நிற்க வேண்டும் என்கிற வெறி சிலருக்கு மட்டுமே ஏற்படும். இதில், ரஜினியும் ஒருவர். அப்படி அவர் அவமானப்பட்ட ஒரு சம்பவத்தைதான் இங்கே பார்க்க போகிறோம்.
ரஜினி இரண்டு படங்கள் நடித்துவிட்டு மூன்றவதாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அப்போது ரஜினி வெறும் ஒரு சிறிய துணை நடிகர்தான். மதிய உணவின் போது ‘இன்னொரு ஆம்லெட் கிடைக்குமா?’ என சாப்பாடு பரிமாறும் புரடெக்ஷன் பாயிடம் ரஜினி கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘கோழி இன்னும் முட்டை போடல’ என சொன்னாராம். இதைக்கேட்டு ரஜினி அவமானமடைந்தாலும் வேகமாக சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
அதன்பின் 5 வருடங்கள் ஓடியது. அப்போது ரஜினி பெரிய நடிகராகி விட்டார். அதே ஏவிஎம் தளத்தில் ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. மதிய உணவு இடைவேளையில் ரஜினிக்கு அதே புரடெக்ஷன் பாய் சாப்பாடு எடுத்து சென்றுள்ளார். அவருக்கு பழைய சம்பவம் நியாபகம் இருந்ததால் ஒரு தயக்கத்துடனே சென்றுள்ளார்.
அப்போது அவரை பார்த்த ரஜினி ‘என்னப்பா கோழி முட்டை போட்டுடுச்சா’ என கேட்டாராம். அந்த நபர் பதறி ரஜினியின் கையை பிடிக்க ‘அதுவெல்லாம் ஒன்றுமில்லை தம்பி. அன்றைக்கு நான் அந்த நிலையில் இருந்தேன். நீ என்னை அவமானப்படுத்தியதால், ஒரு வெறியோடு இங்கிருந்து சென்றேன். வேகமாக ஓடினேன். அந்த அவமானத்தையே உத்வேகமாக எடுத்துக்கொண்டு இப்போது வளர்ந்துள்ளேன்’ என ரஜினி சொல்ல, அந்த நபர் கதறி அழுதுள்ளார்.
அவமானத்தை உத்வேகமாக எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்பதற்கு ரஜினியே சிறந்த எடுத்துக்காட்டு!...
இதையும் படிங்க: எதுக்குயா அரசியலுக்கு வர்றீங்க! – கார்த்திக்கை பார்த்து கலாய்த்துவிட்ட கவுண்டமணி!