பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ரெட்ரோ!.. ரியல் வசூல் எவ்வளவு கோடி தெரியுமா?!…

retro
சூர்யா சூப்பர் ஹிட் படம் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கம் 2 படத்திற்கு பின் வெளியான படங்கள் சூர்யாவுக்கு பெரிய வெற்றிப்படங்களாக அமையவில்லை. ஜெய்பீம், சூரரைப்போற்று ஆகிய படங்கள் வெற்றி என்றாலும் அவரை தியேட்டரில் வெளியாகவில்லை. மாறாக அந்த படங்கள் ஓடிடியில்தான் வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் சூர்யா சிறப்பான நடிப்பையும் கொடுத்திருந்தார். ஆனால், சிலர் வன்மத்தோடு இப்படத்திற்கு எதிராக கருத்துக்களை சொல்லியே படத்தை காலி செய்தனர். எனவே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து ரெட்ரோ படத்தை பெரிதும் நம்பினார் சூர்யா.
பக்கா ஆச்சன் கலந்த கலவையாக ரெட்ரோ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அவரின் பின்னணி இசை பல இடங்களில் சிறப்பாகவே இருந்தது. படத்திற்கு நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

மே 1ம் தேதியான நேற்று இப்படம் வெளியானது. இந்த படத்தோடு சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, நானியின் ஹிட் 3 போன்ற படங்கள் வெளியானது. ஆனாலும், ரெட்ரோ படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாள் இப்படம் 20 கோடி வசூல் செய்திருந்ததாக இன்று காலை செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது இப்படம் உலக அளவில் 46 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த செய்தி சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.