சொன்னதை செய்ய முடியாதா…? இன்னும் திருந்தலையா நீங்க.. தலைவர்170க்காக சண்டைக்கு நிற்கும் ரசிகர்கள்..!
Thalaivar170: டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்துக்கான பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிப்பு வந்த நிலையில் அதில் நடந்த சொதப்பலால் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.
என்கவுண்டர் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் தலைவர்170. ஜெயிலர் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ரஜினிகாந்த் போலீஸ் வேடம் ஏற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. லைகா தயாரிக்கும் இப்படத்தினை டிஜே ஞானவேல் இயக்குகிறார்.
இதையும் படிங்க: நாட்டுக்கட்ட உடம்பு சூடு ஏத்துது!.. டைட் உடையில் கிளுகிளுப்பு காட்டும் ரேஷ்மா…
இப்படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த ரோலுக்கு முதலில் தெலுங்கு நடிகரான நானி, தமிழில் விக்ரம், அர்ஜூன் ஆகியோரிடம் முதலில் பேச்சுவார்த்தை நடந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல வருடம் கழித்து ரஜினியுடன் இணைந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஜனவரியுடன் அனைத்தும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் மற்றும் ஃபகத் ஃபாசிலுக்கு இடையேயான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் வந்த நிவாரணம்! 2 கோடி கொடுத்தாரா அஜித்? யாருக்கும் தெரியாத செய்தி
மேலும், ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்தது. சொல்லப்பட்ட 5 மணியும் தாண்டி விட்டதால ரசிகர்கள் தலைவர்179 ஹேஸ்டேக்கில் அலப்பறையை கூட்டி வருகின்றனர்.
பொதுவாக சினிமா போஸ்டர்கள் சொல்லப்பட்ட நேரத்தில் ரிலீஸ் செய்வது வழக்கம். அதிலும் சூப்பர்ஸ்டார் போஸ்டர் நொடிகள் லேட்டானாலே பிரச்னை செய்வோருக்கு இடையில் இத்தனை நிமிடம் லேட் செய்து இருப்பது பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த நிமிடம் வரை போஸ்டர் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத கதைப்பா! லீக்கான ‘விடாமுயற்சி’ படத்தின் கதை – கொஞ்சம் ரிஸ்க்தான்