இந்த காரணத்தால்தான் பேன் இந்தியா படங்கள் ஜெயிச்சிருக்கு! – பெரிய ஹீரோக்கள் தவறவிட்ட முக்கியமான விஷயம்?

kgf rrr
இன்று ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. போன வருடம் வெளியான படங்களில் சில படங்கள் அதிக வசூல் சாதனை செய்தன. அதில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ஒன்று.
கே.ஜி.எஃப் 2, ஆர்.ஆர்.ஆர், பொன்னியின் செல்வன் ஆகிய மூன்று திரைப்படங்களும் 2022 இல் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்கள். மூன்று திரைப்படங்களுமே நல்ல கதைக்களத்தை கொண்டிருந்தாலும் இவை மூன்றும் வெற்றி பெற வேறு சில காரணங்களும் இருந்துள்ளன.

ponniyin selvan
மூன்று திரைப்படங்களுமே சரியாக விளம்பரப்படுத்தப்பட்டன. கே.ஜி.எஃப் 2 வெளியாவதற்கு முன்பே அனைத்து மொழிகளிலும் உள்ள முக்கியமான யூ ட்யூப் தளங்களில் அதுக்குறித்து பேட்டி அளித்து அனைவரிடமும் கே.ஜி.எஃப் 2 குறித்த ஆர்வத்தை படக்குழுவினர் அதிகரித்துவிட்டனர்.
பேன் இந்தியா படங்கள் வெற்றிக்கு காரணம்:
அதே போல ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கும் ராம்ச்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்பட பலரும் இந்தியா முழுவதும் பயணம் செய்து படத்தை விளம்பரப்படுத்தினர். மேலும் பல யூ ட்யூப் தளங்களுக்கு அவர்கள் பேட்டியும் கொடுத்தனர்.

RRR
பொன்னியின் செல்வன் படக்குழு ஒரு மாதம் இதற்காக ஒதுக்கி இந்தியா முழுக்க பயணம் செய்து படத்தை விளம்பரம் செய்தனர். இதற்காக இவர்கள் ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துக்கொண்டதை பார்க்க முடியும். ஆனால் பெரிய ஹீரோக்கள் பேன் இந்தியா படங்கள் நடித்தாலும் கூட இவ்வளவு தூரம் அதை விளம்பரப்படுத்த முன்வருவதில்லை.
எனவே பெரும் ஹீரோக்கள் பேன் இந்தியா அளவில் புகழடைய படத்தை விளம்பரம் செய்ய வேண்டியது முக்கியம் என்பதை இந்த திரைப்படங்கள் வெளிக்காட்டியுள்ளன.