தமிழ் சினிமாவில் பஞ்ச் டையலாக் பேசிய முதல் நடிகர்!..அட இவ்ளோ நாள் தெரியாம போச்சே!..
தமிழ் சினிமாவில் நாடகங்களில் இருந்து சினிமா வரை அதிகமாக மக்களால் கவரப்படுவது கதையில் அமைந்த வசனங்கள் தான். குறிப்பாக பராசக்தி படத்தில் சிவாஜி பேசிய அந்த வசனத்தாலேயே மிகவும் மக்களிடையே ஈர்க்கப்பட்டார்.
இவரை போன்று வசனங்களை தெள்ளத்தெளிவாக பேசக்கூடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் வீரப்பா. பழம்பெரும் வில்லன் நடிகராக நடித்தவர் வீரப்பா. சிவாஜி, வீரப்பா போன்று இதுவரை வசனத்தை தெளிவாக பேசக்கூடியவர்கள் யாரும் இல்லை என சுந்தரம் என்பவர் தெரிவித்திருக்கிறார். இவர் வேறு யாருமில்லை. வீரப்பாவுக்கு நிர்வாகியாக இருந்தவரின் மகன் தான் சுந்தரம்.
இதையும் படிங்க : 5 நிமிடப் பாடல்… ஆனால் 4 மாதம் படப்பிடிப்பு… தமிழின் முதல் பிரம்மாண்ட திரைப்படத்தின் சுவாரஸ்ய பின்னணி…
மேலும் அவர் கூறும்போது, டையலாக்குகள் மெல்ல மெல்ல குறைந்து பஞ்ச் டையாலாக்குகளாக மாறிவிட்டது என்றும் குறிப்பிட்டார். அதுவும் தமிழ் சினிமாவில் முதன் முதலில் பஞ்ச் டையலாக் பேசி நடித்தது வீரப்பா தான். அவர் நடித்த மகாதேவி படத்தின் மூலம் தான் பஞ்ச் டையலாக் அறிமுகமானது என கூறினார்.
அந்த படத்தில் வரும் மணந்தால் மகாதேவி, இல்லையே மரணதேவி மற்றும் கதாநாயகி அத்தான் என்று சொல்ல அதற்கு வீரப்பா நீ அத்தான் சொன்னதும் நான் செத்தேன் என கூறியிருப்பார். இந்த படத்திற்கு பிறகு சக்கரவர்த்தி திருமகள் படத்திலும் பஞ்ச் டையலாக் வைக்கப்பட்டது என கூறினார்.