---Advertisement---

இப்படி கோல்மால் பண்ணிதான் விஜய் படங்களை ஓடவச்சோம்!.. போட்டு உடைக்கும் பழைய மேனேஜர்..

Published on: March 27, 2026
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய். சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டதால் நடிகராகத்தான் ஆவேன் என அப்பாவிடம் சண்டை போட்டு சினிமாவுக்கு வந்தார். மகனை வைத்து வேறு யாரும் படம் எடுக்க வர மாட்டார்கள் என்பதால் எஸ்.ஏ.சி சொந்த காசை போட்டு விஜயை நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அந்த படம் பாக்ஸ் ஆபிஸ் பிளாப் ஆனது..

அதன்பின் கவர்ச்சியான காட்சிகளை வைத்து ரசிகன் படத்தை உருவாக்கினார் எஸ்.ஏ.சி. அதோடு, கவர்ச்சி பாடலும் இருந்ததால் அந்த படம் வசூலை பெற்றாது. அதன்பின் விஜயை வைத்து சில படங்களை இயக்கினார் எஸ்.ஏ.சி. ஆனால் பெரிதாக பேசப்படவில்லை.
அதன்பின் விக்ரமனின் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் விஜயை கவனிக்கதக்க ஒரு நடிகராக மாற்றியது. அதன் பின் விஜயின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார் விஜய். தற்போது அரசியலிலும் நுழைந்திருக்கிறார்.

இந்நிலையில், விஜையிடம் பல வருடங்கள் பி.ஆர்.ஓ மற்றும் மேனேஜராக பணிபுரிந்த பிடி செல்வகுமார் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். விஜய் நடித்து 2002ம் வருடம் யூத் திரைப்படம் வெளியான போது எதிர்பார்த்த வசூல் இல்லை.. அந்த படத்தை ஓட வைக்க என்ன செய்வது என யோசித்தேன். அந்த படத்தில் விஜயுடன் சிம்ரன் ஆடும் ஒரு குத்து பாட்டு இருந்தது. எனவே அந்த பாட்டு ஸ்கீரினில் வரும் போது ஒரு தியேட்டரில் ஸ்கிரினை கிழித்து விடுங்கள் என சொன்னேன்.

ரசிகர்களும் அதை செய்து விட்டார்கள்.. மறுநாள் இந்த செய்தி எல்லா செய்தித்தாள்களிலும் தலைப்புச் செய்தியாக வந்தது.. அதுவே அந்த படத்துக்கு புரமோஷனாக அமைந்தது. அப்படி என்ன இந்த படத்தில் இருக்கிறது என ரசிகர்கள் ஆர்வமுடன் படம் பார்க்க வர, வசூல் அதிகரித்தது.

இப்படியெல்லாம் கோல்மால் செய்துதான் விஜயின் பல படங்களை நாங்கள் ஓட வைத்தோம்’ என சொல்லியிருக்கிறார்.
மேலும் பூவே உனக்காக திரைப்படம் கூட பிரசாந்த் நடிக்க வேண்டிய படம்தான்.. அந்த கதையை கேள்விப்பட்டு எஸ்ஏசி சாரிடம் சொல்லி ஆர்.பி.சவுத்ரியிடம் பேசி விஜய் அந்த படத்தை நுழைத்தோம்’ என சொல்லியிருக்கிறார்.