பிக்கப் ஆகாத பிடி சார்!.. 10 கோடி பட்ஜெட்டுக்கு பட்டை நாமம்!.. முதல் வார வசூல் இவ்ளோதானா?..

பிளாக் ஷீப் யூடியூப் சேனலில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை இயக்கி வந்த கார்த்திக் வேணுகோபாலன் ரியோ ராஜை வைத்து இயக்கிய நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. ஆனாலும் படத்தின் கதை மற்றும் அதில் சொல்லப்பட்ட சோசியல் மெசேஜ் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதேபோல ஒரு சமூக கருத்தை மையமாக வைத்து ஜாலியான படமாக பிடி சார் படத்தை கார்த்திக் வேணுகோபாலன் ஹிப்ஹாப் ஆதியை வைத்து இயக்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அந்த திரைப்படம் முதல் மூன்று நாட்களில் சுமாரான வசூலை ஈட்டி உள்ளது.

இதையும் படிங்க: கோட் படத்தை ஓட்ட விஜய் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!.. யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!..

ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியான நிலையில், அந்த படம் சுமார் 25 லட்சம் கூட இதுவரை வசூல் செய்யவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், முதல் நாளிலேயே 75 லட்சம் வசூலை பிடி சார் திரைப்படம் வெற்று நிலையில், சனிக்கிழமை அதன் வசூல் சற்றே அதிகரித்து 1.15 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒன்றரை கோடி ரூபாய் வரை பிடி சார் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களில் 3.2 கோடி ரூபாய் வசூலை ஹிப்ஹாப் ஆதியின் படம் பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நல்லவேளை சன் ரைசர்ஸ் டீம் ஜெயிக்கலை!.. இல்லைன்னா ரஜினிதான் காரணம்னு சொல்லியிருப்பானுங்க!..

ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இரண்டாவது வாரமும் பிடி சார் திரைப்படம் பிக்கானால் மட்டுமே போட்ட காசை எடுக்க முடியும் என்றும் இல்லையென்றால் நஷ்டத்தை தான் சந்திக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், இந்த வாரமும் அந்தப் படம் தான் அதிகமாக தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்ட படமாக உள்ளது என்கின்றனர்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை பார்த்து சீன் போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.. இந்த படமாவது ஓடணும்னு வயிறாரா வாழ்த்துங்க!

 

Related Articles

Next Story