Connect with us
tmsoundharrajan

Cinema History

பைத்தியமா இந்த பையன்?!.. டி.எம்.எஸ்சை கலாய்த்த நபர்.. வரிஞ்சி கட்டிகொண்டு வந்த பி.யூ.சின்னப்பா…

தமிழ் சினிமாவில் காலத்தை கடந்தும் மக்கள் மனதில் சில பாடகர்கள் நிலைத்து நிற்பது உண்டு. அந்த வகையில் தனது வசீகர குரலால் மக்கள் மனதை கட்டு போட்டவர் டி.எம்.செளந்தர்ராஜன். இவரின் குரல் ஒலிக்காத சுபகாரியங்களே இல்லை என கூறலாம்.

திரைப்பட பாடல்களை தாண்டி பல பக்தி பாடல்களையும் பாடியவர். மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே என இவர் பாடிய பாடல் இசையை விரும்பும் அனைவரின் செவிக்கும் தேன் வந்து பாயுமாறு அமைந்திருந்தது.

இதையும் வாசிங்க:சூர்யாவுக்கு சூனியம் வைக்க பார்க்குறாரே சியான் விக்ரம்!.. கங்குவாவுக்கு காலனாக மாறும் தங்கலான்?..

இவரின் குரலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கம்பீரக்குரலில் இவர் பாடிய ‘கற்பனை என்றாலும்’.. ‘கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன்’ போன்ற பாடல்கள் மக்கள் மனதுக்கு இதம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தன. சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் போன்ற பல நடிகர்களுக்கு பல பாடல்களை பாடியுள்ளார்.

1954ல் சிவாஜி நடிப்பில் வெளியான ‘தூக்கு தூக்கி’ திரைப்படம் இவருக்கு சினிமா வாழ்க்கைக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அன்றைய நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் ரஜினி, கமல் என இடைக்கால நடிகர்களுக்கு இவர் பல பாடல்களை பாடியுள்ளார்.

இதையும் வாசிங்க:எப்பவும் நான்தான் கெத்து!.. சம்பளத்தில் விஜயை தாண்டிய ரஜினி!.. நிரூபித்த சூப்பர்ஸ்டார்

இவருக்கு தொடக்க காலத்தில் சினிமாவில் பாடல் பாட பெரிதளவில் வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. எனவே வருமானம் வேண்டி பி.யூ.சின்னப்பாவிடம் பணியாற்ற ஆரம்பித்தாராம். அவரது அலுவலகத்திலேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் டிஎம்எஸ். அப்போது ஒரு நாள் பி.யூ.சின்னப்பாவின் நண்பர்கள் அவருடன் சீட்டு விளையாடி கொண்டுள்ளனர்.

TMS

அப்போது டிஎம்எஸ் கீழ்தளத்தில் இருந்து பி.யூ.சின்னப்பாவின் பாடல்களை பாடி கொண்டிருந்தாராம். உடனே சின்னப்பாவின் நண்பர்கள் இவன் ‘என்ன பைத்தியமா?… காலையில் இருந்தே கத்திட்டே இருக்கான்’… என கூறியுள்ளனர். உடனே கோபமடைந்த பி.யூ.சின்னப்பா ‘அவர் பாடிய பாடல் என்னுடைய பாடல்தான்… அதை என்ன விட அவர்தான் மிக அற்புதமாக பாடுகிறார்.. இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது’… என கூறினாராம். ஆனால் அவர் வாய் முகூர்த்தம் பின்னாளில் பழித்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

இதையும் வாசிங்க:ரெண்டு படம் நடிச்சிட்டா டைரக்டர் ஆயிடலாமா?!.. சீண்டிய நபருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி..

google news
Continue Reading

More in Cinema History

To Top