புதுப்பேட்டை பார்ட் 2 வருமா? வராதா?... தனுஷின் தந்தை வெளியிட்ட முக்கிய அப்டேட்…

by Arun Prasad |
Pudhupettai
X

Pudhupettai

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “புதுப்பேட்டை” திரைப்படம் காலத்தை தாண்டியும் பேசப்பட்டு வரும் திரைப்படமாக இருக்கிறது. இப்போதும் சினிமா ரசிகர்கள் அத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக “புதுப்பேட்டை” திரைப்படத்தின் திரைக்கதை, வசனம், மேக்கிங் ஆகியவைகளை மெச்சாத சினிமா ரசிகர்களே இல்லை என கூறலாம். இத்திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது. ரத்தம், பழிவாங்கல் போன்ற இருள் சூழ்ந்த வன்முறையையும் அதன் பின்னுள்ள அரசியலையும் மிகவும் சிறப்பாக படமாக்கியிருந்தார் செல்வராகவன்.

Pudhupettai

Pudhupettai

இந்த நிலையில் சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்குகொண்ட தனுஷ், செல்வராகவன் ஆகியோரின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா, “புதுப்பேட்டை” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார்.

Kasthuri Raja

Kasthuri Raja

“புதுப்பேட்டை” திரைப்படத்தை தொடர்ந்து அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இது குறித்து செல்வராகவனிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, “ஆயிரத்தில் ஒருவன் 2”, “புதுப்பேட்டை 2” ஆகிய திரைப்படங்களுக்கான அப்டேட் விரைவில் வெளிவரும் என கூறியிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “ஆயிரத்தில் ஒருவன் 2” 2024 ஆம் ஆண்டு வெளிவரும் என அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் “புதுபேட்டை 2” குறித்து எந்த தகவலும் இல்லை.

Pudhupettai 2

Pudhupettai 2

இந்த நிலையில் அப்பேட்டியில் கலந்துகொண்ட கஸ்தூரி ராஜாவிடம், சித்ரா லட்சுமணன், “புதுப்பேட்டை 2” திரைப்படம் உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறதா? என ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த கஸ்தூரி ராஜா, “அந்த படம் வரும்ன்னு ரெண்டு பேருமே மாத்தி மாத்தி சொல்றாங்க. ஆனால் ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லமாட்டிக்காங்க. தனி தனியாத்தான் சொல்றாங்க. தாணு மாதிரி ஒரு தயாரிப்பாளர் முன் வந்தால் அது நடக்க வாய்ப்பிருக்கிறது. தனுஷும் செல்வராகவனும் இரண்டு துருவங்களாக இருக்கிறார்கள். தனுஷிற்கு இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதே இல்லை. செல்வராகவனோ அதிகமாக நேரத்தை எடுத்துக்கொள்கிறார். ஆதலால் இதை எல்லாம் தாங்கக்கூடிய சக்தி வந்தால்தான் நடக்கும்” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அவன் மட்டும் என் கையில கிடைச்சான்? – விஜய்சேதுபதியின் கோபத்திற்கு ஆளான அந்த நபர் யார் தெரியுமா?

Next Story