Categories: latest newstelevision

பாலா செய்றதை கவனிச்சீங்க… தினமும் புகழ் செய்றதை மிஸ் பண்ணிட்டோமே!… தங்கம் பாஸ் நீங்க!..

Pugazh: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற கேபிஒய் பாலா நிறைய பேருக்கு உதவி செய்து வருகிறார். அது அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும். ஆனால் யாருக்கும் தெரியாமல் நடிகர் புகழ் செய்து வருகிறது தற்போது கசிந்திருக்கிறது.

விஜய் டிவியில் கேபிஒய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகர் பாலா. அதன் பின் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதுபோல அது இது எது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண் வேடமிட்டு ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் நடிகர் புகழ். இவரும் குக் வித் கோமாளிக்குள் வந்தார்.

இதையும் படிங்க:செல்போன் சுவிட்ச் ஆப்! நாட் ரீச்சபிள்.. எங்கே போனார் ஜெயம் ரவி? ஷாக்கிங் ரிப்போர்ட்!..

மற்ற நிகழ்ச்சிகள் இவர்களை ரசிகர்களிடம் கொண்டு சென்றாலும் குக் வித் கோமாளி தான் இவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அதை தொடர்ந்து இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாலும் உருவானது. இதில் நடிகர் பாலா தன்னுடைய  பணத்திலிருந்து  இயலாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

Pugazh

சென்னை வெள்ளத்தில் தொடங்கி சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்தது என வைரலானது. தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பெரிய பெரிய உதவிகளை செய்து வருகிறார். அது அனைத்துமே இணையத்தில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் செய்யும் கோபி.. சண்டையிட்டு கொள்ளும் முத்து, மீனா… பாண்டியனுக்கு பிறந்தநாள்…

ஆனால் இதுபோல் நடிகர் புகழ் ஒரு விஷயத்தை செய்து வருகிறார். கடந்த ஆண்டு மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் புகழ் இனி தன்னுடைய அலுவலகத்தின் முன் அன்னதானம் வழங்குவேன் எனப் பேசி இருப்பார்.

அன்று சொன்ன விஷயத்தை தற்போது வரை கடைபிடித்து வருகிறாராம். 251 நாட்களைக் கடந்து இன்று வரை தினமும் 50 பேருக்கு தன்னுடைய அலுவலகத்தின் முன் அன்னதானம் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதை வெளியில் எங்குமே புகழ் சொல்லிக் கொள்ளாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

45 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

14 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

16 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

22 hours ago