Cinema History
கல்யாண செய்தி சொன்ன ரெண்டாவது நாளில் மரண செய்தி… “சில்க் ஸ்மிதா இப்படி பண்ணிட்டாளே”… பதறியடித்து ஓடிய டான்ஸ் மாஸ்டர்…
1980களின் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த சில்க் ஸ்மிதா, அன்றைய இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார்.
சில்க் ஸ்மிதா படுபிசியாக இருந்த காலத்தில் அவர், ஒரு நபரை காதலித்து வந்ததாகவும், அந்த நபரையே திருமணம் செய்ய முடிவெடுத்திருந்ததாகவும் பல செய்திகள் வலம் வந்தன. எனினும் 1996 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராவிதமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் சில்க் ஸ்மிதா. இந்த செய்தி திரையுலகத்தினரை திடுக்கிட வைத்தது.
தான் காதலித்த நபரை திருமணம் செய்துகொள்வதாக இருந்த சில்க் ஸ்மிதா, ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து எந்த விவரமும் இப்போது வரை வெளிவரவில்லை. சில்க் ஸ்மிதாவின் தற்கொலை இப்போது வரை மர்மமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பிரபல டான்ஸ் மாஸ்டரான புலியூர் சரோஜா, சில்க் ஸ்மிதாவின் மரணத்தை குறித்து சில நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அதில் “சில்க் ஸ்மிதா என்னிடம் மிகவும் நெருங்கி பழகி வந்தாள். ஒரு நாள் படப்பிடிப்பின் போது என்னிடம் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக கூறினாள். நான் அவளை வாழ்த்தினேன். நான் இரண்டு நாட்கள் திருப்பதிக்கு போவதாக இருந்தது. ‘என்னோட திருமணம் நல்லபடியா நடக்கனும்ன்னு எழுமலையாங்கிட்ட வேண்டிக்கோங்க அக்கா’ என கூறி என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்.
இது நடந்த இரண்டாவது நாளில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்ட செய்தியை பார்த்தேன். நான் அப்போது திருப்பதியில் இருந்தேன். அங்கு ஒரு டீக்கடையில் செய்திதாளை வாங்கிப் பார்த்தபோதுதான் எனக்கு அவள் தற்கொலை செய்துகொண்ட செய்தி தெரியவந்தது. உடனே நான் காரில் மெட்ராஸுக்கு விரைந்தேன். ஆனால் அதற்குள் சில்க் ஸ்மிதாவின் உடலை கொண்டுபோய்விட்டார்கள். சில்க் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாள்?, என்ன நடந்தது? என எனக்கு தெரியவில்லை” என மிகவும் வருத்ததோடு கூறியுள்ளார்..