Connect with us

மார்க்கெட்டே போனாலும் பரவாயில்லை!..இந்தப்படத்தில் நடித்தே தீருவேன் என முடிவு செய்த சத்யராஜ்..

Cinema History

மார்க்கெட்டே போனாலும் பரவாயில்லை!..இந்தப்படத்தில் நடித்தே தீருவேன் என முடிவு செய்த சத்யராஜ்..

அந்தக் காலத்தில் ரஜினி, கமல் படங்களில் மெயின் வில்லன் யார் என்றால் சத்யராஜ் தான். இவர் வில்லனாக நடித்தால் போதும். படம் மெகா ஹிட் தான். தகடு, தகடு, என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கறீய என்ற டயலாக்கிலிருந்து அல்வாடா வரை இவர் பேசிய அனைத்து டயலாக்குகளும் ட்ரெண்டாயின.

வில்லன், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என எந்த வேடம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடித்து அசத்துவதில் இவர் ஒரு மகாநடிகன் தான். இவரது நடிப்பை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது.

தனக்கென ஒரு தனி ஸ்டைல், பாடி லாங்குவேஜ் எனக் கொண்டு தமிழ்த்திரையுலகில் இன்று வரை தனது பாணியைக் கடைபிடித்து நடித்து வருகிறார். கட்டப்பாவை யாராலும் மறக்க முடியாது. உலக அளவில் பேர் வாங்கியவர். அந்த வகையில் சினிமாவைத் தாண்டி சத்யராஜின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

bahupali sathyaraj

நடிகர் சத்யராஜ் 1954 அக்3ல் பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கராஜ். கல்பனா, ரூபா என 2 தங்கைகள். தாயார் நாதாம்பாள். மகேஸ்வரி மனைவி. ஒருமுறை சத்யராஜிடம் உனக்கு என்ன வேண்டும் என கேட்டார். அதற்கு உங்கள் கர்லா கட்டை வேண்டும் என கேட்டு வாங்கிக் கொண்டார்.

சத்யராஜின் மகள் திவ்யாவுக்கு திருமணமாகி விட்டது. அவர் சென்னையில் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். 1983ல் சிபிராஜ் பிறந்தார். 2008ல் ரேவதியை திருமணம் செய்தார். ரேவதி சாப்ட்வேட் என்ஜினீயர். சத்யராஜின் நாத்திகக் கொள்கைகளுக்கு ஏற்ப சிபிராஜூம், அவரது மனைவி ரேவதியும் திருமணத்திற்கு முன்பாகவே 10 வருடம் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

சத்யராஜ் கோவை அரசுக்கல்லூரியில் பிஎஸ்.சி. தாவரவியல் படித்துள்ளார். அப்போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போது அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தாலும் அவரது தாயாரின் பேச்சைக் கேட்காமல் சென்னைக்குச் சென்று விட்டார். சென்னையில் அன்னக்கிளி ஷ_ட்டிங் நடக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கு சென்று சிவக்குமாரிடம் தன் ஆசையைத் தெரிவித்துள்ளார்.

சிவக்குமாரும், சத்யராஜூம் ஒரே ஊர், ஒரே ஜாதிக்காரர்கள். படித்த படிப்புக்கேற்ற நல்ல வேலைக்குச் செல்லுமாறும், சினிமா எல்லாம் சரிப்பட்டு வராது. மிகவும் கஷ்டப்படவேண்டியிருக்கும். வீட்டிற்குப் போ என்றும் அறிவுரை கூறியுள்ளார் சிவக்குமார்.

ஆனால் சிவக்குமாரின் பேச்சைக் கேட்காமல் நாடகக்குழுக்களில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். கிடைக்கும் நேரங்களில் சினிமா வாய்ப்பைத் தேடினார். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிப்பது, சினிமாக்கம்பெனிகளில் மேனேஜராக வேலை பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்.

சத்யராஜ் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மற்ற நடிகர்களைப் போல இவர் சென்னை வந்து கஷ்டப்படவில்லை. சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும்போதே பிசினஸ்களையும் செய்துள்ளார்.

பயனற்றுக் கிடக்கும் வாகனங்கள், கப்பல்கள் ஆகியவற்றை விலைக்கு வாங்கி அதிலிருந்து இரும்பு ஆகியவற்றைப் பிரித்து விற்பனை செய்தல், ஐஸ்கிரீம் கடை நடத்துவது போன்ற தொழில்களை செய்து வந்தார்.

1984ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான நூறாவது நாள், 24 மணி நேரம் போன்ற படங்களில் சத்யராஜூக்கு முக்கியமான வில்லன் ரோலைக் கொடுத்தார். சத்யராஜூம், மணிவண்ணனும் ஒரே ஊர்க்காரர்கள். பள்ளி, கல்லூரித் தோழர்கள்.

இதனால் மணிவண்ணன் இயக்கத்தில் நடிப்பது சத்யராஜூக்கு மிகவும் எளிமையாக இருந்தது. இயக்குனர் தன் நண்பன் என்பதால் சத்யராஜ் எதையும் தயங்காமல் சிறிதும் பயப்படாமல் தன் மிரட்டலான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தினார் சத்யராஜ்.

தொடர்ந்து இவருக்கு நிறைய வில்லன் வேடங்கள் தேடி வந்தன. ஒரே வருடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்கள் வந்தன. மணிவண்ணன் மற்ற இயக்குனர்களைப் போல ஸ்கிரிப்ட் வைக்கமாட்டார். படப்பிடிப்பின் போதே மனதில் வைத்திருந்து யதார்த்தமாக வேலை வாங்கி விடுவாராம்.

கவுண்டமணியுடன் நடிக்கும்போது மட்டும் சத்யராஜால் சிரிக்காமல் இருக்க முடியாது. இதனால் இவர் நடிக்கும் போது பல டேக்குகள் ஆகும். அது தெரியக்கூடாது என்பதற்காக வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பார்.

சத்யராஜ் வில்லனில் இருந்து ஹீரோவாக மாறி பல வெற்றிப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கத் தயாரா என இயக்குனர் மணிவண்ணன் இவரிடம் கேட்டுள்ளார்.

ஒரு சிறந்த கதை இருப்பதாகவும் கூறியுள்ளார். அப்போது சத்யராஜூக்கு மீண்டும் வில்லனாக நடிப்பதில் விருப்பமில்லை என்று சொன்னார். நேரில் வந்து கதை சொல்கிறேன். அப்போது கதை பிடித்து இருந்தால் நடியுங்கள். இல்லை என்றால் பரவாயில்லை என்றார். சரி. எப்படி கதை சொன்னாலும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாராம் சத்யராஜ்.

amaithipadai Sathyaraj

மணிவண்ணன் வீட்டிற்கு வந்து கதை சொல்ல ஆரம்பித்ததும் அதைக் கேட்க கேட்க புல்லரித்து விட்டாராம் சத்யராஜ். அப்போது எம்எல்ஏ தேர்தல் ரிசல்ட் வரும்போது சத்யராஜ் சேரில் மெது மெதுவாக பின்னாடி சாய்ந்து உட்காருவார். அந்த சீனை மணிவண்ணன் சொல்லும்போது உடனடியாக நான் இந்தப்படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார் சத்யராஜ்.

மார்க்கட்டேப் போனாலும் பரவாயில்லை. இந்தப்படத்தில் நான் நடித்தேத் தீருவேன் என்று சொல்லி நடித்த சத்யராஜிக்கு இந்தப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்து விட்டது. இதுபோன்று மீண்டும் ஒரு படத்தை மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியாலேயே கொடுக்க முடியாமல் போனது. அமைதிப்படையின் 2ம் பாகமாக நாகராஜ சோழன் இப்படித்தான் உருவானது. ஆனால் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top