கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா தி ரூல். சந்தன மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் வசூலை அள்ளியது. இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகவும் புஷ்பா படம் விளங்கியது. அதில் இருந்து அல்லு அர்ஜுனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகமாகினர்.
அவருடைய மாஸ் இன்னும் அதிகமாகியது என்றே சொல்லலாம். புஷ்பா படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை ஒட்டி அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழு திட்டமிட்டு இப்போது அது முழுவதுமாக நிறைவடைந்து இருக்கிறது. வரும் டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
இதையும் படிங்க: வடிவேலுவை நம்பி ஏமாந்துட்டேன்.. கடைசில குப்பையாதான் கொடுத்தாங்க! புலம்பும் தயாரிப்பாளர்
அதனால் இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களுக்கு படக்குழு சென்று படத்திற்கான புரமோஷன் வேலைகளில் முழுவதுமாக இறங்கி இருக்கிறார்கள். இன்று சென்னையில் ஒரு பெரிய விழாவே நடந்திருக்கிறது. இந்த நிலையில் முதல் பாகம் வெற்றியடைந்ததற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது சமந்தாவின் ஊ சொல்றியா பாடல்தான்.
அதுவும் திருமண விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு முதல் முறையாக சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய திரைப்படமாகவும் இந்த படம் அமைந்தது. அதனாலயே அந்த பாடலின் மீது ஒரு பெரிய ஹைப் இருந்தது. அந்த எதிர்பார்ப்பையும் சமந்தா முற்றிலுமாக பூர்த்தி செய்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதுவரை எந்த படத்திலும் தனது கிளாமரை காட்டாத சமந்தா புஷ்பா படத்தில் ஒரு தரமான நடனத்தை போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அதனால் முதல் பாகம் வெற்றியடைந்ததற்கு அவருடைய அந்த நடனமும் பாடலும் காரணமாக இருந்தது. அதைப்போல புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் அப்படி ஒரு பாடலை அனைவரும் எதிர்பார்த்தனர். அதிலும் சமந்தாவே ஆடினால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் .ஆனால் அவருக்கு பதிலாக ஸ்ரீலீலா இந்தப் படத்தில் ஆடியிருக்கிறார்.
இதையும் படிங்க: சொதப்பிய மணிரத்னம்.. 5 இயக்குனர்கள் வேலை பார்த்த நாயகன்!. வெளிவராத தகவல்!..
கிஸ் கிஸ் கிஸுக்கு என தொடங்கும் அந்தப் பாடல் இப்போது வைரலாகி வருகிறது. தமிழில் அந்தப் பாடல் வரிகள் முழுவதும் கிளாமராக இருப்பதை பார்க்க முடிகிறது. அதை பார்த்த அனைவரும் சமந்தாவின் ஊ சொல்றீயா பாடலை யாராலும் பீட் பண்ண முடியாது என கமெண்டில் கூறி வருகிறார்கள். ஆனால் நடனத்திற்கு மிகவும் பேர் போனவர் ஸ்ரீ லீலா. அதற்கு எந்தவித குறையும் இல்லாமல் இந்த பாடலில் ஆடி இருக்கிறார் என்பது சின்ன சின்ன அந்த கிளிம்ப்ஸ் பார்த்தாலே தெரிகிறது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…