ரஜினிக்கு படம் பண்ணனும்னா அப்படி பண்ணனும்!.. புஷ்கர் காயத்ரியின் ஃப்ரீ அட்வைஸை கேட்பாரா நெல்சன்?..

ஆர்யா மற்றும் பூஜா நடிப்பில் வெளியான ஓரம் போ படம் மூலம் இரட்டை இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி.

ஆனால், அந்த படம் அவர்களுக்கு சுத்தமாக கை கொடுக்கவில்லை. அடுத்து வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்த இருவரும் இணைந்து உருவாக்கிய விக்ரம் வேதா படம் இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மாதவன் மற்றும் விஜய்சேதுபதி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுத்தனர்.

ஆனால், அதன் பிறகு புஷ்கர் காயத்ரி இணைந்து பல படங்கள் பண்ணுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

விக்ரம் வேதா படத்தை பார்த்துப் பிடித்துப் போன பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இந்தியில் அந்த படத்தை இயக்க இவர்களை அழைத்து பல காலத்தை ஓட்டிவிட்டார்.

விரைவில் இந்தி விக்ரம் வேதா படம் வெளியாக உள்ளது. அந்த படத்தை முடித்த இருவரும் தமிழில் மீண்டும் இணைந்து எழுதிய சுழல் எனும் வெப்சீரிஸ் கதையை பிரம்மா எனும் இயக்குநரை வைத்து இயக்க வைத்தனர்.

ஆனால், ஒட்டுமொத்த வேலைகளையும் இவர்கள் இருவரும் தான் செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில், சுழல் வெப்சீரிஸ் குறித்த பேட்டி ஒன்றில் பேசிய இருவரும் ரஜினிகாந்த் சாருக்கு படம் பண்ண நாங்கள் எப்பவும் நினைத்தது இல்லை.

அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் ரஜினிகாந்தை கெத்தாக காட்டி படம் பண்ணினாலே போதும் மற்றவற்றை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள் என பேசியுள்ளனர்.

அந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட் பக்கத்தில் இயக்குநர் நெல்சனை டேக் செய்து நல்லா கேட்டுக்கோ நெல்சா, கெத்தா படம் பண்ணிடு, மத்ததை நாங்க பார்த்துக்குறோம் என ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story