Cinema News
Allu Arjun: ‘அந்த’ வார்த்தையை பயன்படுத்தக் கூடாது… புஷ்பா 2 – படத்திற்கு வந்த சிக்கல்!…
Pushpa 2″ டோலிவுட் நடிகர் என்பதை தாண்டி பேன் இந்தியா நடிகராக அல்லு அர்ஜுன் உருவாகி விட்டார். சிறந்த இயக்குநர்கள் கையில் கிடைத்தால் நிச்சயம் அவரின் சினிமா உலகில் மேலும் பல நல்ல படங்கள் கிடைக்கும்.
தற்போது அவரின் நடிப்பில் புஷ்பா 2 படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகிறது. சுமார் 5 வருடங்கள் இந்த படத்திற்காக அவர் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார். அதோடு முதல் பாகம் ஏற்படுத்திய பாதிப்பில் இரண்டாவது பாகத்திற்கு பணம் கொட்டு கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது.
தியேட்டருக்கு வரும் முன்பே போட்ட பணத்தை படக்குழு எடுத்து விட்டது. சொல்லப்போனால் லாபமும் சம்பாதித்து விட்டனர். இந்தளவு கதையில் ஒன்றுமில்லை என்றாலும் மாஸ் காட்சிகள், பாடல்களை வைத்து இயக்குநர் இப்படத்தை ஒப்பேற்றி விட்டார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில், ‘நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர் பட்டாளத்தை அழைக்க ஆர்மி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அப்படி அவர் பயன்படுத்தக் கூடாது.
இதையும் படிங்க: புஷ்பா 2 நிகழ்ச்சியில் பொங்கிய தேவி ஸ்ரீ!.. எதுக்கு அப்படி பேசினாரு?!.. தயாரிப்பாளர் விளக்கம்..!
ராணுவம் என்பது ஒரு கௌரவமான பதவி. அந்த வீரர்கள்தான் நம் நாட்டைப் பாதுகாப்பவர்கள். அவர்களை அடையாளப்படுத்தும் அந்த வார்த்தையை உங்கள் தனிப்பட்ட ரசிகர்களுக்கான வார்த்தையாக அழைப்பது கூடாது. அதற்கு பதிலாக அவர் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தட்டும்,’ என கூறப்பட்டு இருக்கிறது.
இதற்கு அல்லு அர்ஜுனின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் படக்குழுவை விடவும் இதுபோன்ற புகார்கள் தான் படத்திற்கு பெரிதாக புரோமொஷனை வாரி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.