---Advertisement---

Pushpa 2: திடீரென ‘புஷ்பா 2’வில் செய்யப்பட்ட மாற்றம்! ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் இதெல்லாம் தேவையா?

Published on: November 11, 2024
---Advertisement---

Pushpa 2: கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இந்தப் படத்தை சுகுமார் இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருந்தார். தெலுங்கு மொழியில் வெளியான இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பகத் ஃபாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டு பாகங்களில் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

பேன் இந்தியா படம்:ஆந்திரப் பிரதேசத்தின் இராயசீமை பகுதியின் சேசாசலம் மலைப்பகுதியில் செஞ்சந்தன மரக்கடத்தலை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது. தெலுங்கில் வெளியான இந்தப் படம் மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டன. எல்லா மொழிகளிலும் படம் வெற்றிகரமாக ஓடியது.

இதையும் படிங்க: K.Balachander: நடிகரின் நம்பிக்கையைப் பொய்யாக்கிய பாலசந்தர்… யார்…? என்ன படம்னு தெரியுமா?

தமிழை பொறுத்தவரைக்கும் இந்தப் படத்திற்கு பிறகுதான் அல்லு அர்ஜூனுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாகினர். அதுவரை தெலுங்கில் எந்த நடிகர்களுக்கு கிடைக்காத தேசிய விருது இந்தப் படத்திற்கு பிறகு அல்லு அர்ஜூனுக்கு கிடைத்தது. இதன் மூலம் தெலுங்கில் முதல் தேசிய விருதை பெற்ற நாயகனாக அல்லு அர்ஜூன் திகழ்ந்தார்.

சமந்தா ஏற்படுத்திய ஹைப்: படத்தின் வெற்றிக்கு சமந்தா ஆடிய ஊ சொல்றீயா பாடலும் ஒரு காரணமாகும் .இந்தப் பாடல்தான் படத்திற்கு பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது. மேலும் பின்னணி இசையும் அற்புதமாக செய்திருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த நிலையில் முதல் பாகத்தின் வெற்றியை தொடந்து இரண்டாம் பாகமும் உருவானது. இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் நடித்திருக்கின்றனர்.

படம் டிசம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. புஷ்பா தி ரூல் என்ற பெயரில் இரண்டாம் பாகம் தயாராகியிருக்கிறது. இரண்டாம் பாகத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தான் இசையமைத்திருக்கிறார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் பின்னணி இசை இயக்குனருக்கும் அல்லு அர்ஜூனுக்கும் திருப்தியாக இல்லையாம்.

thaman
thaman

இதையும் படிங்க: Sarathkumar: ஷூட்டிங்கில் கெட்டுப் போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு!… நாட்டாமை செய்த தரமான சம்பவம்!..

அதனால் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமனை புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின்னணி இசையை அமைக்க அவரிடம் கேட்டுகொண்டு வருகிறார்களாம். சமீபத்தில் கூட ஒரு விழாவில் தமன்தான் புஷ்பா 2 படத்திற்கு இசையமைக்கிறார் என்று கூறியிருந்தார். இன்னும் அது சம்பந்தமான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.