Pushpa 2: பைட்னா எம்ஜிஆர் படத்தையே அப்படி பார்த்தவன்... ஆனா புஷ்பா 2க்கு நோ சான்ஸ்... அசந்து போன பிரபலம்

by sankaran v |   ( Updated:2024-12-05 17:45:01  )
mgr pushpa 2
X

mgr pushpa 2

புஷ்பா 2 இன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு. பாசிடிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

அடிச்சித் தூக்கிடுச்சு

ஆரம்பத்துல 3.21 நிமிஷம்னு சொன்ன போது நாம எப்படியும் அரை படம் தூங்கப்போறோம்னு தான் நினைச்சோம். ஆனா முதல் ஒண்ணே முக்கால் மணி நேரம் அடிச்சித் தூக்கிடுச்சு.

Also read: Pushpa 2: அஜித் செய்யாததை அல்லு அர்ஜூன் செய்து கிளாப் வாங்கிட்டாரே.. கத்துக்கோங்க கடவுளே அஜித்தே

பைட், டான்ஸ்னு லேடி கெட்டப்ல வர்றாரு. என்னன்னமோ பண்றாரு. அடிச்சித் தூள்கிளப்பிட்டாரு அல்லு அர்ஜூன் என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க.

ஆக்சுவலா பான் இண்டியா படங்கள்னு நிறைய வரும். ஒரிஜினல்னு கம்மியாத் தான் வரும். கேஜிஎப், காந்தாரா டைப்ல வரும். கேஜிஎப்போட ஒட்ட முடியல. இந்தப் படத்தோட டிராவல் பண்ண முடியுது. கதை, டுவிஸ்ட், சுவாரசியமான காட்சி அமைப்புகள்னு எல்லாமே இருக்கு.

ரொம்ப விறுவிறுப்பு

படம் ரொம்ப விறுவிறுப்பா இருந்தது. எங்கேயும் சாய்ச்சி விடலை. அவ்வளவு டைட்டான ஸ்கிரின்பிளே. செகண்ட் ஆப்பும் ரொம்ப ரொம்ப டிபிகல்ட்டான தெலுங்கு படம் மாதிரி மாறிடுது.

படம் ரொம்ப நல்லாருக்கு. அல்லு அர்ஜூன் தான் எல்லாமே. சாமி ஆடுற அளவுக்கு டான்ஸ் இருக்கு. இந்தப் படத்துக் கோரியோகிராபர எவ்வளவு பாராட்டுனாலும் தகும். அந்த டான்ஸைப் பொருத்தவரைக்கும் ரெண்டுபேருமே அல்டிமேட்டா ஆடிருக்காங்க. ராஷ்மிகாவை எல்லாம் கொண்டாடலாம்.

Pushpa 2

Pushpa 2

வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டையை அனுப்புறாரு. அங்கிருந்து பெரிய தொகையை வாங்குற மாதிரி போகுது. செகண்ட் ஆப் வேற ஒரு சென்டிமென்ட் களத்துக்குப் போகுது. பிரிஞ்சி இருந்த குடும்பம் ஒண்ணு சேருது.

பார்ட் 3க்கு லீடு

அப்போ வில்லன் வந்து குண்டு வைக்கிறான். அவங்க எல்லாருமே செத்தாங்களா? பொழைச்சாங்களா? அப்படி கதை போகுது. இனி ஜப்பான் போவாங்களான்னு தெரியாது. அதனால இது பார்ட் 3க்கு லீடு கிடையாது.

படத்துல நிஜ கணவன், மனைவியாகவே நடிச்சிருக்காங்க. டிராமா மாதிரி எங்கேயுமே தெரியாது. ராஷ்மிகாவுக்கு டல் மேக்கப் தான். இது கியூட்டான ஜோடி. மசாலா படங்களை ரொம்ப காமெடியா பார்ப்பேன். எம்ஜிஆர் பைட்டையே அப்படி பார்ப்பேன்.

பர்பக்டா இருக்கு

Also read: வீட்டுல விசேஷமுங்கோ!.. கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான செய்தி சொன்ன விஜே மணிமேகலை..!

ஆனா இந்தப் படத்துல எடுக்கப்பட்ட விதத்தை நினைச்சி நானே பிரமித்துப் போனேன். கை, கால் கட்டுன காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடிச்சிருக்காரு மனுஷன். ரோப்ல கட்டி புரட்டி உருட்டி எடுத்துருக்காங்க. பறந்து விழுறது, கழுத்தைக் கடிக்கிறது என அந்த பஞ்ச் அவ்வளவு பர்பக்டா இருக்கு. ரொம்ப ஆச்சரியமா இருக்கு என்கிறார் அந்தனன்.

Next Story