Cinema News
ஆன்லைன் புக்கிங்கில் ரெக்கார்ட் பிரேக்கிங்!. அடிச்சி தூக்கிய புஷ்பா 2!….
Pushpa 2: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். கடந்த 20 வருடங்களாக அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார். புஷ்பா திரைப்படம் மூலம் பேன் இண்டியா நடிகராக மாறியிருக்கிறார். பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மெகா வெற்றிக்கு பின் பல தெலுங்கு படங்களும் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியாக துவங்கியது.
அப்படி அல்லு அர்ஜூனின் நடிப்பிலும் சுகுமார் இயக்கத்திலும் உருவாகி 2021ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம்தான் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக்கட்டை கடத்தலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.
இதையும் படிங்க: அட இப்படியொரு சாதனையா!.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பட்டையை கிளப்பும் லக்கி பாஸ்கர்!..
ஸ்ரீதேவி பிரசாத் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன் காட்சிகளை கொண்ட படமாக புஷ்பா வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளியது. இதன் தொடர்ச்சியாக புஷ்பா 2 உருவாக துவங்கியது.
இந்த படத்தில் முக்கிய வில்லனாக பஹத் பாசில் நடித்திருக்கிறார். ஏற்கனவே, டிரெய்லரில் இவர் வரும் காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை இப்படம் கொடுத்திருக்கிறது.
இப்படத்தின் தியேட்டர் உரிமை, இசை உரிமை, டிவி மற்றும் ஓடிடி உரிமை என பல கோடிகளை இப்படம் சம்பாதித்து விட்டது. இப்படம் டிசம்பர் 5ம் தேதியான நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள புஷ்பா 2 படம் டிக்கெட் முன்பதிவில் 100 கோடியை வசூல் செய்து சாதனை.. இதுவரை எந்த இந்திய படமும் இந்த அளவுக்கு முன்பதிவில் சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எப்பவுமே கமல்தான் ஃபர்ஸ்ட்!.. மனுசன் இவ்வளவு பண்ணிட்டு சைலண்ட்டா இருக்காரே!.. வாங்க பார்ப்போம்!..