ரிலீஸ் தேதியை லாக் செய்த கோட் படக்குழு!.. குறுக்கே வரும் அந்த ஹீரோ!.. இதே வேலையா போச்சி!..

இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்களே திட்டமிட்ட தேதிகளில் ரிலீஸ் செய்யமுடியவில்லை. அதற்கு காரணம் பேன் இண்டியா படங்கள் என சொல்லிக்கொண்டு மற்ற மொழி நடிகர்களின் படங்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியாகிறது. அந்த படங்களும் தமிழ் படங்களோடு இணைந்து வெளியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல், நம்ம ஊர் பெரிய நடிகர்களின் படங்களும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் வெளியாகிறது. அப்போது அங்குள்ள பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் அது தமிழ் படங்களுக்கு சிக்கலாக அமைகிறது. அதாவது, அதிக தியேட்டர்கள் கிடைக்காமல் போய்விடும் நிலை ஏற்படுகிறது.

இதையும் படிங்க: அஜித் வச்ச கடைசிக்கெடு!.. பதறிப்போன விடாமுயற்சி படக்குழு!.. இதுக்கு இல்லயா சார் ஒரு எண்டு!..

ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களே இந்த பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதற்கு வியாபாரம் பெரிய அளவில் அதிகரித்து விட்டதுதான் முக்கிய காரணம். விஜயின் கோட் படமும் இந்த சிக்கலை சந்தித்திருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கோட்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் ரசிகர்களிடம் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் இப்படத்தில் ஒரு விஜய் 20 வயது வாலிபனாக வருகிறார். வித்தியாசமான கதைக்களம் என்பதால் இப்படம் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் விஷயத்துல ஏமாந்து போயிட்டேன்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சுந்தர் சி…

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முடிவடையவுள்ளது. இந்த படத்தை ஆகஸ்டு 15ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்தது. ஆனால், அப்போது ஆந்திராவில் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படம் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக கோட் படத்திற்கு ஆந்திராவில் அதிக தியேட்டர்கள் கிடைக்காது.

எனவே, ஆகஸ்டு 15ம் தேதிக்கு முன்போ, இல்லை சில நாட்கள் கழித்தோ பின்னரோ கோட் படம் வெளியாகலாம் என கணிக்கப்படுகிறது. அல்லது தமிழ் நாட்டில் ஆகஸ்டு 15ம் தேதி வெளியிட்டுவிட்டு ஆந்திராவில் 2 நாட்கள் கழித்து கோட் படத்தை ரிலீஸ் செய்யவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயின் வாரிசு படம் வெளியான போதும் இது போன்ற சிக்கலை சந்தித்தது.

 

Related Articles

Next Story