Cinema News
கல்கி பாகுபலி கேஜிஎஃப் எல்லாம் ஓரமாபோங்க!.. ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2..!
புஷ்பா 2 திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
புஷ்பா 2: இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு முடிவு செய்தார்கள். அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் புஷ்பா 2 திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
இதையும் படிங்க: Biggboss Tamil: பிக்பாஸில் இந்த வாரம் அந்த பிரபல டாஸ்க்கா? அப்போ அதிரடி சரவெடிதான்!.. மிஸ் பண்ணாதீங்கப்பா
கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த படத்திற்கு பல்வேறு மொழிகளில் புரமோஷன் நிகழ்ச்சிகளும் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன. படம் வெளியாவதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கின்றது.
ப்ரீ புக்கிங்:
புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் ரிலீஸுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் அனைத்து மொழிகளிலும் ப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படம் உலக அளவில் நேற்று மட்டும் 42.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
பாகுபலி கேஜிஎஃப் சாதனைகள் முறியடிப்பு:
அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் மாறி இருக்கின்றது. ரிலீஸ்க்கு முன்னதாகவே பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றுச் சாதனையை படைத்து வருகின்றனர். படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் புக் மை ஷோவில் படம் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இதன் மூலம், கல்கி 2898, பாகுபலி 2 தி கன்க்ளூஷன் மற்றும் கே.ஜி.எஃப் 2 போன்ற முந்தைய படங்களின் சாதனையை புஷ்பா 2 முறியடித்து இருக்கின்றது. இந்த திரைப்படம் தெலுங்கு ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய சந்தைகளில் 35.8 கோடி வரை வசூல் செய்துள்ளது. தொடக்க நாளுக்கான முன்பதிவுகளில் மட்டுமே 50 கோடி ரூபாய் வரை இப்படம் வசூல் செய்திருக்கின்றது.
இதையும் படிங்க: கேம்சேஞ்சர் தான் அந்தப் படத்துக்கு ஹைப்!.. என்ன இப்படி சொல்லிட்டாரு எஸ்.ஜே சூர்யா!..
மேலும் தெலுங்கில் ப்ரீ புக்கிங்கில் ரூ.17.16 கோடியும், இந்தியில் ரூ.12 கோடியும், மலையாளத்தில் ரூ.1.02 கோடியும் வசூல் செய்து இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் மொழியில் ரூ.83.87 லட்சமும், கன்னட மொழியில் ரூ.3.61 இலட்சமும் வசூல் செய்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. ப்ரீ புக்கிங்கிலேயே சாதனை படைத்து வரும் புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலக அளவில் 200 முதல் 250 கோடி வரை வசூல் செய்யும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.