Cinema News
அஜித் படத் தயாரிப்பாளரை தவிக்கவிட்ட அல்லு அர்ஜுன்!.. லைகாவை தொடர்ந்து அந்த நிறுவனமும் போண்டியா?..
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் புஷ்பா 2 படத்தையும் தயாரித்து வருகிறது. புஷ்பா படம் கொடுத்த வெற்றியால் அதன் மூலம் அந்தம் ஒட்டுமொத்த லாபத்தையும் அடுத்த படத்தின் பட்ஜெட்டாக கொட்டி மூன்று வருடங்களாக அந்த படத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி படத்தை வெளியிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் பலவீனமான திரைக்கதைக்கு என்ன காரணம்? உள்ளதை ஓப்பனாக சொன்ன பிரபலம்
ஆகஸ்ட் 15-ஆம் தேதி வர முடியாது என நினைத்த தயாரிப்பு நிறுவனம் டிசம்பர் 6 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்தது. ஆனால் தற்போது அதற்கும் வழியில்லை என்கிற நிலை உறுதி ஆகிவிட்டது.
நடிகர் அல்லு அர்ஜுன் தனது தாடியை ட்ரிம் செய்து விட்டு குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு ஒருமாத காலம் சுற்றுலா சென்று விட்டதாக கூறுகின்றனர். அதைப்போல இயக்குனர் சுகுமார் அமெரிக்காவுக்கு தனது குடும்பத்துடன் டூர் சென்று உள்ளாராம்.
இதையும் படிங்க: ப்ளீஸ் எனக்காக வெயிட் பண்ணுங்க!.. இயக்குனரிடம் கெஞ்சு கேட்ட தனுஷ்.. வட போச்சே!…
பெரிய படத்தை முடிக்காமல் இயக்குனரும் ஹீரோவும் வெளிநாட்டுக்கு பறந்து சென்று விட்ட நிலையில் தேவையில்லாமல் வட்டி கட்டும் நிலைமைக்கு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டதாக கூறுகின்றனர்.
அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் விடாமுயற்சி படத்தின் கால தாமதம் காரணமாக தங்கள் படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், லைக்கா நிறுவனத்தைப் போல கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: என்ன மனுஷன் தெரியுமா அவரு.. கதை கேட்ட உடனே அவர் சொன்ன பதில்… முரளியை புகழ்ந்த சிங்கம்புலி..!