More
Categories: Cinema News latest news

கலர் கலரா ரீல் விட்டும் புஷ்பா 2 போனியாகல!.. ஒரேயடியாய் தெறித்து ஓடிய அல்லு அர்ஜுன்!.. ரிலீஸ் எப்போ?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி வெளியானது. புஷ்பா 2 திரைப்படம் போன வருஷமே வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள் அறிவிக்கும் ரிலீஸ் தேதியில் படங்களை வெளியிட முடியாமல் தவித்து வர காரணம் அந்தப் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல விநியோகஸ்தர்களிடம் அதிகத் தொகைக்கு படத்தை விற்க முயற்சிப்பதுதான் காரணம் என்கின்றனர்.

இதையும் படிங்க: பக்ரீத் பண்டிகையிலும் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திய மகாராஜா!.. 4 நாளில் மொத்த வசூல் இவ்வளவா?..

பல பெரிய படங்கள் சரியாக உருவாகாத நிலையில் அதிக தொகைக்கு விற்பனை செய்ய முடிவு எடுத்ததன் விளைவாக படங்களின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றன. கல்கி திரைப்படம் இந்த ஆண்டு மே 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி வெளியாகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி புஷ்பா 2 ரிலீசாகப் போவதாக அறிவிக்கப்பட்டு இன்னும் 100 நாட்களில் புஷ்பா 2 வருகிறது என்றெல்லாம் பில்டப் கொடுத்தும் படத்தின் டீசர் வெளியிட்டும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் இரண்டாவது சிங்கள் வெளியான பின்னரும் படம் சரியாக பிசினஸ் ஆகாத நிலையில் தற்போது அதிரடியாக இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 6 ஆம் தேதி படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: என்னதான் லேடி சூப்பர்ஸ்டாரா இருந்தாலும் அந்த விஷயத்துல கோட்ட விட்ட நயன்! கெத்து காட்டிய நடிகை

டிசம்பர் 6 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 17-ஆம் தேதி புஷ்பா திரைப்படம் வெளியான அதே நாளில் படத்தை ரிலீஸ் செய்திருக்கலாமே என மேலும், 10 நாட்கள் தாமதமாக வெளியிட கோரி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எப்போது வெளியானாலும், 500 கோடிக்கு மேல் பட்ஜெட் தாண்டிய நிலையில் அதை மீட்க 1000 கோடியாவது படம் வசூல் செய்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் வரும் என்றும் படம் கொஞ்சம் சொதப்பினாலும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அஜித் செட்டே ஆகல!.. பிடிக்கவே இல்லை!. சுனாமி வந்து தூக்கட்டும்னு நினைச்சேன்.. புலம்பும் இயக்குனர்!

Published by
Saranya M

Recent Posts