புஷ்பாவையே தூக்கி சாப்பிட்ட கோலிவுட் படம்...! இனிமேல் தான் இருக்கு வேட்ட..!
கௌதம் மேனன் இயக்கத்தில் திரைக்கு வரவிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் சூட்டிங் முடிந்து நடிகர் சிம்பு பத்து தல படத்தில் நடிக்க இருக்கிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் சிங்கிள் வருகிற 6ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதையடுத்து மே 25 ஆம் தேதியில் இருந்து பத்து தல சூட்டிங்கில் சிம்பு கலந்து கொள்ள இருக்கிறார்.
ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்த சிம்புவிற்கு இந்த படத்திற்கு பிறகு தான் மார்க்கெட்டே உயர்ந்தது. அது மட்டுமில்லாமல் கலெக்ஷனும் அள்ளியது. ஓடிடியிலும் மாநாடு படத்திற்கான வசூலும் எகிறிச்சு. சிம்புவின் சினிமா வரலாற்றில் இந்த படம் தான் அவருக்கு ஒரு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது.
இந்த நிலையில் இந்த படத்திற்கான சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கி கொண்டது. மே 1 ஆம் தேதியில் இருந்து இந்த படத்தின் முதல் பிரீமியர் விஜய் டிவியில் ஒளிபரப்பியது. இதற்கு முன் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தையும் இந்த தொலைக்காட்சிதான் வாங்கியது.
விஜய் டிவியில் மாநாடு படம் ஒளிபரப்பானதில் புஷ்பா படத்தின் டிஆர்பி குறைந்து விட்டது. மாநாடு படத்தின் டிஆர்பி அதிகமாக உயர்ந்து விட்டது. இதை பார்த்து திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளனர். புஷ்பா படத்தின் சாதனையை இந்த படம் இந்த அளவுக்கு முறியடிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதுமட்டுமில்லை இனி வரும் சிம்புவின் படங்களும் எந்த அளவுக்கு இருக்க போகிறது என்று அனைவரும் வியப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.